பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 த. கோவேந்தன்

ஒலிப்பிலா வெடிப்பொலி ஆம் (பார்க்க : க). மொழிக்கு முதலில் தமிழில் தகரம் இந்த ஒலியே பெறும்; மாது முதலிய இடங்களில் இரண்டு உயிரிடையே உரசு ஒலி யாகும் (Other என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பினைக் காண்க). இங்கே நாதுனி பரந்து, பல் ஈற்றினைத்தொடு வது போல் வரும்; நெகிழ்ந்து மிகக் குறுகி ஒலிக்கும். பந்து முதலிய இடங்களில் நகரத்தின்பின் இது ஒலிப் பொலியாம் (Voiced) இந்தத் தகரம், பத்து முதலிய இடங் களில் இரட்டித்து வரும்போது செறிவுடை வெடிப் பொலியாம் கத்து முதலிய இடங்களிற் போலக் குற்றெழுத்துக்கு இப்படித் தகரம் பின் ஏறக்குறைய இரண்டு மெய்யளவு மாத்திரையும், காத்து முதலிய இடங்களில் நெட்டெழுத்தின் பின் அதில் குறைந்தும், பார்த்து முதலிய இடங்ககளில் ரகரத்தின் பின் ஒரு மெய்யளவு மாத்திரையும் பெற்றும் வரும் என்பர் பர்த் (Firth) இரட்டித்த தகரம் உயிர்களிடையும், ய், ர், ழ் என்பவற்றின் பின்னுமே வரும்.

தகரம் மொழிக்கு முதலிலும் இடையிலும் அன்றி ஈற்றில் வாராது; மெல்லெழுத்துக்களில் நகரத்தின் பின் மட்டுமே வரும். ‘ன்’ அல்லது 'ல்'; 'ண் அல்லது ‘ள்’ என்பவற்றின் பின்வரும் தகரம் முறையே றகர டகரமாக மாறும் மகரம் தகரத்தின்முன் நகரமாகத் திரியும் நெட்டெழுத்தினை அடுத்துவரும் ய், ர், ழ் என்பவற்றின் பின் மட்டுமே தகரம் வரும். தனிக் குறிலின் பின்னர் ர் வந்தால் உகரம் வந்த பின்னரே தகரம் வரும் (அருத்தாம் =அருத்தம்). தகரத்தின் முன்னோ பின்னோ இவை நீங்கிய பிற மெய் எழுத்துகள் வருவதில்லை தொல்காப்பியர் காலத்தில் தகரத்தின் முன்வரும் ஆய்தம் அந்தத் தகரம் உரசு ஒலி என்பதனைக் காட்டியது எனக் கருதுகின்றனர் பலர் (பார்க்க: ஆய்தம்) 'அது' முதலிய இடங்களில் இன்று ஆய்த எழுத்தின்றியும் உரசு ஒலியாக ஒலிப்பது இயல்பாகிவிட்டது. அஃது என்று இன்றும் சிலர் எழுதிவந்தாலும் அந்த ஆய்தத்தின் இயல்பு இன்று விளங்குவதில்லை.