பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 151

வட்டெழுத்து :

வட்டெழுத்து என்ற பெயருக்கு ஏற்ப 3 போல் சிறிதாக எழுதப்படும் தகரத்தின் அடிக்கோட்டிலிருந்த உட்குழி பெருத்த கொக்கியாக உகரக் குறி எட்டாம் நூற்றாண்டில் அமைந்திருக்கக் காண்கிறோம் பின்னைய நூற்றாண்டில் தகரம் மிகச் சிறிதாக அமைய, அதன்கீழ் வரும் கொக்கியின் உள்வளைவு செல்லவும், அவ்வாறு வளையாதபோது கீழிறங்கிய உட்குழிவு பெருத்த வளைவாக வட்டெழுத்தில் வகரம்போல நிற்கவும் காண்கிறோம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வளைவின் உட்குழிவு மிகமிக நேர்ந்துபோனதோடு, ‘ட’ போல் அமைந்து, அதன் வலப்புறம் மெல்ல மேல் நோக்கி வளைந்து நிற்கக் காண்கிறோம். பதினோராம் நூற்றாண்டிலிருந்து தகரத்தின் தலைக்கோடு இடப்புறத்தில் சாயந்து வளைய, உகரக்குறி கீழ்நோக்கிப் பின் மேலெழும் வளைவாக அமைகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஒலையில் சிலபோது 'து' போல் எழுதி, இதன் வலப்புறத்துக் கோட்டை வளைத்து, அவ்வெழுத்தை முற்றிலும் வளைந்து வரும் சூற்றாகச் சுற்றி, இடம் வலமாக இழுத்து, மறுபடியும் வலத்தே மேல்நோக்கி நிற்கும் வளைவாகச் சில இடங்களில் அமைக்கக் காண்கிறோம்.

ஆனால் பழைய நிலைமை முற்றும் மாறவில்லை. இந்த வரலாற்றைக் கீழே காண்க :

அசோகர் k. தமிழ்க்குகை எழுத்து w ή கி. பி. 8ஆம் நூற்றாண்டு t கி.பி. 9ஆம் நூற்றாண்டு t *J 8) ንህ