பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 15

இலக்கண உருபு இருக்கிறது வினைச் சொற்களுக்கு நான்கு இலக்கண உருபுகள் ஆட்சியிலுள்ளன வாக்கியத் தில் பல பாகங்களை (எழுவாய், பயனிலை, செயப்படு பொருள்) ஒரு குறிப்பிட்ட வரிசையில் தான் அமைக்க வேண்டும் துணை வினைகள், உருபிடைச் சொற்கள் இவைகளைக் கொண்டு ஒரு சொல்லுக்கும் மற்றொரு சொல்லுக்குமுள்ள சம்பந்தத்தை வெளியிடுகிறார்கள் ஆகவே ஆங்கிலம் சீன மொழியின் எளிமையை அடைந்து வருகிறது.

ஆனால் இந்தோ ஐரோப்பிய மொழியில் காணப் படும் உயிரெழுத்து மாறும் முறை (Abtant) இப்பொழுதும் ஆங்கிலத்தில் காணப்படுகிறது. (எ.கா) (Sing, Sang, Sung), சொற்களைச் சேர்க்கும் முறையும், அவைகளைப் புதியனவாக ஏற்படுத்தும் முறையும் பெரும்பாலும் செர்மானிய முறையைப் பின்பற்றியிருக்கின்றன ஆதார மொழியிலும் இலக்கண உருபுகள் இல்லாமல் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்திற்கு இது புதிதல்ல (எ.கா) வடமொழி பர; கிரேக்கு பெரே, ஆங்கிலம்: பியர் (Bear)

எனவே, இன்னும் ஆங்கிலமும் சில சிறந்த அமிசங் களில் ஆதார மொழியுடன் தொடர்பு வைத்துக் கொண் டிருக்கிறது என்பது நன்கு விளங்குகிறது