பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 173

தொகுத்த கொய்சகம் என்பது தொக்கை என்றாய் முன்றானையைக் குறிக்கும். தோ என்பது நாயைக் கூப்பிடும் ஒலியாக இன்று வழங்கும் தோவாளம் (கிணற்றுச்சுவர்) என்பது திருநெல்வேலி வழக்கு

தோல்=தோலி (ஈற்றில் இகரப்பேறு); தோல்=தோர் (ல=ர, தோரா=ஓயாத); துவர்=தோரை, தகப்பனார் =தோப்பனார் (துவ=தோ; தக=தோ, இங்கே பின்வரும் உதட்டெழுத்தின் சாயலால் அகரம் ஒகரமாம் உதட் டெழுத்தாக, அது மருவிய எழுத்துகளின் இரு குறிலின் அளவை நிரப்ப நெடிலெழுத்து மாயிற்று). தோற்பாடி = தோய்ப்பாடி=தோப்பாடி (துவுடன்); தோற்பை= தோப்பை (இருவேறு வல்லெழுத்துகளின் முன்னது 1%āramross® spañspn.go.gylb-Progressive assimilation-domaioré. இடையில் யகரம் கெடலும் காண்க) தொழுநோய், தோணை (உகரம் கெடஅதனை நிறைவு செய முதல் நீள, ழ்+நோ=னோ என்றாய்ப்பின், கெட்ட யகரத்தின் சாயலால் ஒ=ஐ ஆன்மை காண்க); தோன்று=தோணு (ன்று=ணு) முதலிய மரூஉ வழங்கும் தமிழில் வழங்கக் காணலாம்.

நி என்பது மெய்யெழுத்து தகரம் பிறக்கிற இடத்தில் நாவும் பல்லும் நிற்க, வாய் வழியாக மட்டும் அன்றி மூக்கின் வழியாகவும் மூச்சு வெளிவர, மெல்லண்ணம் கீழிறங்க ஒலிக்கும். மூக்கொலியாதலின் மெல்லெழுத்து எனப் பெயர் பெறும். ஆனால், பல்லவர் காலத்திலிருந்து ன, ந என்ற இரண்டொலியும் ஒன்றாயின. பல்லின் வேருக்கும் ஈற்றுக்கும் சிறிது மேலாக ஒலிக்கும் னகர ஒலியின் ஒலியே இதன் ஒலியாக