பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 177

பகரத்தின் முன் வரும் மெல்லெழுத்துக்கள் மகரமாகத் திரிந்தன: (என்பு:எம்பு, பண்பு> பம்பு). பழைய இலக்கிய வழக்கில் குறிலின்பின் வரும் வகரம், பகரத்தின்முன் (அவ்+புதிய, அஃபுதிய = அவை புதிய) ஆய்தமாகத் திரிந்தபோது, பகரத்தின் ஒலி உரசொலி யாகும்.

ப என்பது, இரண்டு இதழ்கள் ஒட்டும்போது எழும் இதழ்ஒலி (Labial sound). இன்று தமிழ் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் வழங்கும் தமிழ் ஒலிப்பு முறையில், பல் என்பதிற்போல மொழிக்கு முதலிலும், தப்பு என்பதிற்போல, இரட்டித்து வரும் போதும், p என்பது போன்ற ஒலிப்பிலா வெடிப் பொலியாகவும் வம்பு முதலியவற்றில் போல மெல் லெழுத்தின் பின்வரும்போது w என்பது போன்ற ஒலிப்புடைய ஒலியாகவும் (இந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதிவகை அந்த ஒலியே வழங்கியது எனலாம்), சில இடங்களில் 3 என்ற கிரேக்க எழுத்தின் ஒலிப்பிலா உரசு இதழ் ஒலியாகவும் சில இடங்களில் ய w என்ற ஒலிப்புடை உரசு இதழ் ஒலியாவும் ஒலிக்கக் காண்கி றோம். விம்மி அழும்போது பகரம் மூச்சினை உள்ளிழுத்து ஒலிக்கும் உள்வாங்கு ஒலியாகவும், உறழ்ந்து பேச்சு வழக்கில் வரும் கஃபு என்றதில் உள்ள ஆய்தம் 0 என்ற, உரசு ஒலியாம் 'ப' என வடமொழியில் வழங்கும் உபத்மானியம் என்ற ஒலியை ஒப்பிட்டுக் காண்க./

பொருள் : பகரம் எதிர்கால இடைநிலையாகும். சேர்ப்பார் முதலிய சொற்களைக் காண்க. என்மர், என்மனார் என்ற இடங்களில் இருந்த பழைய மகரமே மக்கொலி நீங்கிப் பகரமாயிற்றுப்போலும். வல் லெழுத்துக்கும் மெல்லெழுத்துக்கும் பின்னன்றிப் பிற எழுத்துகளில் பின் பகரம் வகரமாயிற்று பகரம் எதிர்கால இடைநிலையாக மட்டும் அன்றிக் காப்பு என்பதிற் போலச் சொல் ஆக்கநிலை உருபாகவும் (word formative) உயிரோடு சேர்ந்து வரும். இங்கும் பகரம் முன் யதுபோலச் சேர்வு முதலியவற்றில் வகரமாகும். தபம் > தவம், உபமா > உவமா (உவமை) என்பனவற்றிற் போலப் பிறமொழிச் சொற்கள் தமிழான போது