பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 த. கோவேந்தன்

வகரமாகத் தொடங்கி இருத்தல் வேண்டும். மொழி யிடையில் வல்லொற்றுக்கள் கெட்டு வருவது பழந் தமிழிலும் பிராகிருதத்திலுமாக இந்தியா முழுவதிலும் வழங்கிய வழக்காம் இடையில் பகரம்கெட்டு, த.அம், உஅமா என நின்றவை பின்னர் உடம்படு மெய் பெற்றுத் தவம், உவமா (உவமை) என வந்தன எனக் கருத இடம் உண்டு. இத்தகைய இடங்களில் பகரம் இவ்வாறு வகரமாக மாறுவது பெருவழக்கான பிறகு சேர்வு என்பதிற் போலவும் பகரம் வகரமாயிற்று பு என்ற விகுதி உ என்ற விகுதியாக மாறியதும் இதனாலேயே உடம்படு மெய்யல்லாத மெய் என வழங்குவன இவ்வாறு எழுந்தனபோலும் இவ்வாறு மாறுவது முன் கூறியதுபோல இடை எழுத்துகளின் பின்னும் உயிர் எழுத்துகளின் பின்னுமே ஆம் வினை அடிக்கு ஏற்பப் பகரமோ வகரமோ எதிர்கால இடைநிலையாக வரும் என்று உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுவர் ஆனால் படுப என்பதுபோலப் பலர்பாலில் வரும் பழைய வழக்கு மாறாது நின்றது இவ்வாறு பகரம் வகரமாக முழுவதும் மாறுவதற்கு முன் சில காலம்வரை பகரமும் வகரமும் உறழ்ந்து வந்தனபோலும் ம> ப> அ> வ என வரலாறு கூறலாம் மொழிக்கு முதலிலும் பண்டி வண்டி என வருதலும் உண்டு.

சிலபோது பர்வதம் பருவதம் என ஆவதே அன்றிப் பருப்பதம் என ஆவதும்போல, வகரம் பகரமாதலும் உண்டு போன்ற பிறமொழி ஒலிகளும் பகரம் ஆகும் Coffee >காப்பி. ஆங்கில b தனிப்பகரமாகவும் (baby= பபி, p இரட்டைப்பகரத்தில், முதல் பகரத்தில் ஒற்றுத்ல் உண்டேயன்றி விடுதலாம் வெடிப்பு இல்லை எனவே அதனை நெடில் பகரம் எனலாம் ஆனால், பேச்சு வழக்கில் இந்த நெடிற் பகரம் குறிற்பகாமாகவே ஒலிக்கிறது. ஒற்றையாக வந்தால் b ஒலியும் இரட்டை யாக வந்தால் p என்ற ஒலியும் கேட்கிறோம்

வரிவடிவம் : இந்த ஒலியின் வரிவடிவ வளர்ச்சி அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது