பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 183

வானம்=மானம் மகரம் வகரத்தின் முன்னும் (தரும் வரம் னகாரணகாரங்களின் பின்னும் (கேண்ம், போன்ம்) மாத்திரையில் குறுகும். முன்னைய மகரம் பல்லிதழ் மகரம் ஆகலாம்; அனுரு வாரமாகலாம். பின்னையதில் மகரம் னகார ணகாரங்களின் மெல்லொலியோடு ஒட்டிச் சிறிதளவே இதழ் மூடுவதால் ஒலிக்கும் மகரத்தில் முடியும் சொற்கள் பேச்சில் மகர ஒலி இழக்கும்; அப்போது அதன் உயிர் மூக்கொலி உயிராம்.

மகரம், நான் நாம் என்பவற்றிற்போலப் பழைய பன்மைக்குறியாகஇருந்தது எனலாம்.

என்மர் என்புழிப்போல மகரம் எதிர்காலம் காட்டும். இதுவே பின் பகரமாகிப் பின் வகரமாகவும் ஆயது போலும்.

மகரம் மத்திமம் என்னும் இசையின் குறி எழுத்தாம். திங்கள், சிவன், கூற்றுவன், காலம், படைப்போன், திருமால், நஞ்சு என்ற பொருளில் மகரம் வரும்.

வடிவம் தொல்காப்பியம் பகரத்திற்கும் மகரத்திற்கும் வேற்றுமை காட்டுவதாக "உட்பெறுபுள்ளி உருவா கும்மே” என்ற சூத்திரத்திற்குப் பொருள் காண்பர் உரையாசிரியர் பகரத்தினுள் ஒரு புள்ளி பெற்று அது மகரமாம் என்பர் உரையாசிரியர். மெய்யெழுத்து என்பதைக் காட்ட வீரசோழிய உரையாசிரியர் மகரத்தின் மேல் புள்ளியிடுவதோடு உள்ளாலும் புள்ளி பெறுவதே மகரக்குறுக்கத்தின் வடிவம் என்று இதற்கு விளக்கம் கூறுவர்.