பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 த. கோவேந்தன்

வெளியானது ஒரு தட்டைப் பிளவு போலப் பரந்து நிற்பதன்றிக் குவிந்து நிற்குமென இந்த உவமைகொண்டு நாம் முடிவு செய்தலாகாது.

யகரம், இகரத்திற்கொத்த இடையெழுத்து எனலாம் உரசுதல் உள்ளபோது இகரம் யகரமாகும் அலகுபெறும் உயிரொலி ஈற்றில் படுத்துச் சொல்லப்பெறும்போது இகரம் யகரமாகும். தொல்காப்பியர் காலத்திலேயே இந்த மாறுதல் நிகழ்ந்துவிட்டது போஇ போய் என்றானது. 'இன்' என்ற இறந்தகால இடைநிலையின் மொழியீற்று மெல்லெழுத்தாம் னகரம். கெட்டுச் சூடி’ என்பதைப் போல இகரமாக நிற்கும் போது உயிரெழுத்திற்குப்பின் யகரமாக ஈற்றில் மாறும்; அதனால் போ’ என்பதன் அடியாகப் பிறந்த வினையெச்சம் போய் என்று அமையக் காண்கிறோம்

‘இகர யகரம் இறுதி விரவும்’ என்பது தொல் காப்பியம். இகரத்தின் பிறப்பிடமே யகரத்தின் பிறப்பிட மாம். ஆனால் நாவானது இகரத்திற்கு எழ வேண்டிய தற்கு மேலும் சிறிது உயரமாகவே அண்ணத்தை நோக்கி நிற்கும்போதே யகரம் ஒலிக்கும் இந்த இடைவெளியின் உயரவேற்றுமை ஒன்று அல்லது இரண்டு மில்லிமீட்டர் தான் இருக்கும் எனவே, இவற்றிடையே உள்ள வேற்றுமை உயரத்தாலன்றி வேறு வகையால் எழுந்த தாதல் வேண்டும். ஒலிப்பு எழும்போது உள்நாவின் பின்புறத்தே நிகழும் ஒத்தொலிப்பின் வேற்றுமையே இந்த வேற்றுமைக்குக் காரணமென்பர். அகர ஆகாரத்தின் முன்னோ (மர யானை) உகர ஊகாரத்தின் முன்னோ (வரையூடு) யகரம் வரும்போது அதன் விடு நிலையில் நாவினியக்கம் பெரிதளவில் நிகழும். அங்கே, யகரம் ஒலிக்கும் முன்னண்ணத்தைவிட்டு நாவானது பின் செல்ல வேண்டுமன்றோ, அப்பொழுதெல்லாம் ஒலிப்பும், ஒத்தொலிப்புட்ம தொடர்ந்து நிகழ்வதால் ஒலி வேறுபாடு தெற்றெனத் தோன்றும். அத்தகைய