பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 187

நிலையில் உரசுதல் குறைந்தும்போகும். அகர உகரங்களின் முன் நாவானது செறிந்தோ உயர்ந்தோ அமையவேண்டுவதில்லை. இகரத்தின் முன் யகரம் வகும்போதோ யகரம் ஒலிக்குமிடத்திலிருந்து இகரம் ஒலிக்குமிடத்திற்கு நாவானது மாறுதற்கில்லை. விடு நிலை ஒன்றும் அங்கு எழவேண்டுவதில்லை ஆதலின், அங்கே இகரமும் யகரமும் வெவ்வேறென்றே செவிப் புலன் ஆகவேண்டுமானால், யகரத்தின் பிடி நிலையில் உரசுதல் மிக்கெழுதல் வேண்டும்.

சில உயிரொலிகள் தொடங்கும்நிலைக்கும் முடியும் நிலைக்கும் இடையே வேறுபடுவதனைக் கண்டோம். அவற்றைக் கூட்டொலி என்று விளக்கினோம். தமிழிலே இவற்றின் தொடங்கு நிலை உரத்தும் நீண்டும் விளங்கும் ஐ என்பது அய் என்பதாம். இவற்றைக் குறைந்துவருங் கூட்டொலி என்பர் ஈகாரம் ஈய்' என ஒலிப்பதனையும் ‘ஏ’ என்பதும் 'ஏய்’ என்று ஒலிப்பதனையும் குறிப் பிட்டோம் இய் முதலியன கூட்டொலிபோல ஒலிக்கின்றன என்பர் ஆனால் இவை உண்மையில் கூட்டொலிகளா அல்லது இருவேறு ஒலிகளின் மயக்கமா என்றாராய்தல் வேண்டும். ஒரு முழு உயிரை அடுத்து உடம்படு மெய் போன்ற நெகிழுயிர் முன்னோ பின்னோ அமைய வருவதே கூட்டொலி என்பர் ரூ வீட்டு என்ற அறிஞர். இது எல்லா இடத்தும் உண்மை யாவதில்லை "யு' என்பது ஒலியனாகவே ஆங்கிலத்தில் வரக் காண்கிறோம். ஆனால் தமிழில் யகரம் அவ்வாறு ஆகாமல் மெய்யும் உயிரும் மயங்கும் மயக்கத் தினிடையே தான் வரக் காண்கிறோம்.

யகரம் பழந்தமிழில் ஒலியனா என்பதொரு கேள்வி. யகரம் உடம்படு மெய்யாக வருவது தொல்காப்பியர் காலத்தே கட்டாயமில்லை எனவே அக் காலத்தில் உயிர்களும் ஒன்றோடொன்று மயங்கி வருமெனத் தெரிகிறது. போஇ’, ‘ஆஇ’ என்பனவே பிற்காலத்தே