பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 17

ஒலியியல் முதலியவற்றை ஆராய்தலே மொழியியல் <gļGLb (Tabular column)

19ஆம் நூற்றாண்டில், மொழியின் தோற்றம் பற்றிப் பலர் பலவாறு ஆராய்ந்து கூறிவந்தனர் இன்றும் அத்தகைய ஆராய்ச்சி மொழியியலுக்குப் புறமானது என்றும், தேவையற்றது என்றும் கருத்துக்கள் நிலவு கின்றன சொற்களின் பிறப்பும் பொருள் வளர்ச்சியும் பற்றிய ஆராய்ச்சியும் (Etymology) மொழியியலுக்கு ஒரளவு புறமானதாகவே கருதப்படுகிறது. ஆயின், சொல்ல மைப்பு (Morphology), சொற்றொடரமைப்பு (Syntax) ஆகியவை இன்றியமையாதனவாகக் கருதப்படுகின்றன

மக்கள் பல்வேறு இடங்களில் தனித்தனியே வெவ்வேறு குழுவினராய் வாழ்ந்த காலத்தில் போக்கு வரத்தும் கலப்பும் இல்லாமையால், அங்கங்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழிகள் வேறுபட்டு வளர்ந்தன. உலகின் மொழிகள் பலவாய் ஏற்பட்டதற்குக் காரணம் அதுவே ஒரே மொழி பேசுவோருள்ளும், எக் காரணத்தாலாவது போக்குவரத்தும் கலப்பும் குறைந் தால், படிப்படியாக அந்த மொழி இரு வகையாய், மூவகையாய் வேறுபட்டு, முதலில் கிளைமொழிகளாய் நின்று, பின்னர் இனமொழிகளாய்ப் பிரியும். ஆயின், உலகம் ஒரு குடும்பம்போல் நெருங்கிவிட்ட இக் காலத்தில், பலர்க்கும் பொதுவான அறிவு நூல்களும், வானொலியும், செய்தித் தாள்களும், மற்றவையும் பெருகி வருவதாலும், சாதி, சமயம் முதலியன கடந்து பழகும் பழக்கம் மக்களிடையே மிகுந்து வருவதாலும், இனி மொழிகளுக்குள் புதிய வேறுபாடுகளும் பிரிவுகளும் தோன்றுவதற்கு இடம் இல்லை

ஒவ்வொரு மொழியும், அதைப் பேசும் தனி மனிதரின் உரிமையாகவும், அவர் வாழும் சமுதாயத்தின் உடைமையாகவும் இருந்துவரக் காண்கிறோம் ஆயினும், தனி மனிதர் தம் விருப்பம்போல் மொழியின் கூறுகளை