பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 த. கோவேந்தன்

‘போய்', 'ஆய்' என ஆயின. உயிரளபெடைகளும் ஈரலகு பெறும் உயிர் மயக்கமேயாம் உடம்படுமெய் வரும் இடத்தை ஆராய்ந்தாலும், இய், ஈய், எய், ஏய், ஐய் எனக் கூட்டொலிகள் போல் இவை ஒலிப்பதனைக் கண்டோம் இந்த நெகிழொலிகளே யகர உடம்படு மெய்யாக அமைந்தன எனலாம் இந்த வழக்கு மிகப் பழைய வழக்கன்று. பழைய வழக்கு இ, எ, ஏ, ஐ, என்பன மொழி முதலாக வரும்போது, அவற்றின் முன்னாக யகரமெய் நெகிழொலியாக வந்ததெனலாம். இன்றும் இந்த ஒலிகளைத் தமிழர் ஒலிக்கும்போது, மேனாட்டார் இவற்றின் முன்னே யகர ஒலி கேட்பதாகவே கூறு கின்றனர் இதற்கேற்ப 2, 3 நூற்றாண்டுகளாக வழங்கும் ஏட்டுச் சுவடிகளிலும், மொழிக்கு முதலிலும் இவை, யிகரம் முதலியனவாக எழுதப் பெற்றிருக்கக் காண்கிறோம். எனவே மாயிரு, கோயில், ஆயிடை முதலிய பழைய வழக்குக்களில் யகரவுடம்படு மெய் வருமொழி அல்லது வரு மொழி உறுப்பினை ஒட்டிவந்திருக்கக் காண்கிறோம். பிற்காலத்தோ, நிலை மொழியை ஒட்டியே யகரவுடம்படுமெய் வருதல் பெரு வழக்காயிற்று. இதனையே பவணந்தியார் குறிக்கின்றார் ஆனால் இதற்கும் பிற்காலத்திற்கு வருவோமானால், யகரம் நெகிழுயிராக, இகர முதலியவற்றின் பின்னும் முன்னும் வரக் காண்கிறோம் (தீய்.யிது). எனவே, மொழிக்கு இடையே வரும் யகரத்தை உடம்படுமெய் யென்று ஒதுக்குதல் கூடும்.

ஆனால் மொழிக்கோ, மொழியுறுப்பிற்கோ ஈற்றில் வரும் யகரம் இத்தகைய நெகிழொலியாகாது. எனினும், மொழியீற்று யகரத்தை, 'போய்’ என்பதைப் போல இகரத்தின் ஈற்றுத் திரிபு என்று கொள்ளுதல் கூடும் ஆதலின், ஆராய எஞ்சி நிற்பது மொழிக்கு முதலாம் யகரமேயாம்.