பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 189

பழந்தமிழில், தொல்காப்பியத்தின்படி யகரம் ஆகாரத்துடன்தான் மொழிக்கு முதலாம் இவ்வளவு சிறிய அளவில் யகரம் வழங்குவது அஃது ஒலியன் தானா என்ற ஐயத்தைக் கிளப்புகிறது அங்கும் நெகிழொலியாக வந்து யகரமாகத் திரியும் இகரமென்றே அதனைக் கொள்ளலாகாதா என்பது கேள்வி பிற்காலத் தமிழில் உயிர்கள் உயிர்களோடு உடம்படு மெய்யின்றி மயங்கு வதில்லை ஆதலின், அந்த நிலையில் இ+ஆ=யா எனக் கொள்வதற்கில்லை ஆனால் தொல்காப்பியர் காலத்தில் உயிரோடு உயிர் மயங்கும் மயக்கம் உண்டு எனக் கூறியுள்ளோமாகலின் யகரத்தை இகரமெனக் கொள் வதில் அத்தகைய தடையொன்றுமில்லை

யா என்பது குறுகினால் எகரமாகவே குறுகக் காண்கிறோம். யான்-என்; யாது-எது; யாம்-எம் என வருதல் காண்க

ஆனால் வல்லண்ண ஒலியான சகர ஞகரங்கள் சான்றோர்>ஆன்றோர், ஞர்-நீர்>ஈர் என்பவற்றிற்போல மொழிக்குமுதலில் கெட்டு நிற்பதும், மொழிக்கு முதலில் அகரத்திற்கு முன் வந்தால், செத்தான் ஞெண்டு-என அகரத்தை எகரமாக்கி வருவதுபோல வல்லண்ண ஒலியான யகரமும், யானை, யாது முதலியனவற்றில் யகரம் முதலில் கெட்டு அடு அறு என வருவதோடு, யகரத்தின் பின்வரும் ஆகாரம், யகரம் கெட்டபின் எகரமாகியும் வருதலை யாது- எது; யான்-என் முதலிய எடுத்துக்காட்டுக்களில் காணலாமென்றும் கூறத் தகும்

உயிர்-உசிர் என்பதுபோல யகரத்தினிடத்தே சகரம் வருவதனைச் சேரி வழக்கிலும், கன்னடம் முதலிய பிற மொழி வழக்கிலும் காண்கிறோம் யகரமோ சகரமோ பழையது என்பது கேள்வி உயிர்களுக்கிடையே வரும் வல்லெழுத்து பகல்>பால் என்பதைப்போலக் கெடுதலும் உண்டு. அதே போல உசிர் உஇர் என்றாகிப் பின் யகரவுடம்படுமெய் பெற்று உயிர் என்று நின்றதென்றும் கொள்ளலாம்