பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 த. கோவேந்தன்

பிற்காலத் தமிழில் வடமொழி முதலிய பிறமொழிச் சொற்கள் புகுந்ததால் யுகம், யூபம், யோகம், யெள கந்தராயர் என இகர ஈகார, எகர, ஏகார, ஐகாரங்கள் அல்லாத உயிரெழுத்துகளோடு யகரம் மொழி முதலாக வரக் காண்கிறோம் எனினும் இகர முதலான முன்னுயிர் களோடு யகரம் இன்றும் வாராமை காண்க. யகரத்தையும் இகர முதலியவற்றையும் மொழிக்கு முதலிற் பிரித்தறி யுமாறு ஒலிப்பது தமிழ் நாவிற்கு அருமை போலும் அவ்வாறு ஒலியாமையே தமிழ்ப் பழக்கம்

யகரம் வருமொழி முதலாக வரும்போது நிலை மொழி ஈற்றுக் குற்றியலுகரம், குற்றியலிகரமாகத் திரியுமென்று முன்னரே கண்டோம். பிற்காலத்தே மொழியின் ஈற்றில் வரக்கூடிய மெல்லெழுத்தும் இடை யெழுத்தும் உகரச் சாரியை பெற்று வருவது இயல் பாயது (மண்ணு, பல்லு) இந்த உகரமும் வருமொழி முதலில் யகரம் வரும்போது இகரமாகத் திரிவதனைக் காணலாம் (மண்ணியாது சொல்லியாது) இவ்வாறு உகரத்தின் திரிபாகக் கொள்ளாமல் ஈற்றில் வரும் மெல்லெழுத்து அல்லது இடையெழுத்தின் பின் இகரம் நெகிழொலியாக வருகிறதென்று கூறுதலும் கூடும் இந்த இகரத்தைச் சாரியை என்பாரும் உளர்

யகரம் மூக்கொலி பெற்றால் ஞகரம் போன்றே ஒலிக்கும். இவ்வாறு யகரம் ஞகரமாகத் திரிவதைத் தொல்காப்பியர் குறிக்கின்றார் மண், பொன் போன்று மெல்லெழுத்தில் முடியும் சொற்களின் பின்னே யாத்தல் என்ற வினைச்சொல்லடியாகப் பிறந்த சொற்கள் வருமானால், யகரமும் மெல்லொலிச்சாயல் பெற்று ஞகரமாகும் என்பர் (மண்யாத்த மண்ஞாத்த). வட மொழி யமன் என்ற சொல்லுள்ள யகரம் பின்னே மெல்லெழுத்து வருவதால் ஞகரமெனும் மெல்லொலி ஆகும் (யமன் ளுமன்)