பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 岱91

தமிழில் வாராத நிலையில் யகரம் ஆ அல்லாத உயிர்களோடு மொழிக்கு முதலாகிப் பிறமொழிச் சொற்களில் வந்தால், அவை தமிழியல்பிற்கேற்ப மாறியே தமிழில் வரும் அகரத்தோடு மொழி முதலாகும் யகரத்தின் முன் இகரம் முந்து நிலை ஒலியாக வரும் (யr:ன்-இயக்கன்; யந்திரம்-இயந்திரம்) உகரத்தோடு யகரம் மொழி முதலாகும்போது உகரம் முந்து நிலையாகும் (யுத்தம்-உயுத்தம்) யகரம் இத்தகைய இடங்களில் கெடுவதும் உண்டு (யுத்தி-உத்தி) மொழி முதலில் வரும் யகர அகரம் தமிழில் எகரமாகத் திரிவதும் உண்டு (யமன்-எமன் : யந்திரம்-எந்திரம்), பிற்காலச் சோழப் பேரரசின் காலத்தும், பல்லவர் காலத்தும் யுகம், யெளகந்தராயண் போன்ற வடமொழிச் சொற்கள் தமிழில் நிறையப் புகுந்தன ஒட்டக்கூத்தர் நூலில் இந்த நிலையைக் காணலாம் ஆனால் சேக்கிழார் காலத்தி லிருந்தே நிலைமை சிறிது மாறியதால் தமிழுக்கேற்பப் பிறமொழிச் சொற்கள் மாறுவதனை வரையறுத்துத் தம் காலத்திற் கண்டபடி பவணந்தியார் கூறலாயினர். வடமொழியில் மெய்யெழுத்துகளின் பின்னர் யகரம் கூட்டெழுத்தாக அமையும் (க்ய, ந்ய) இத்தகைய இடைநிலை மெய்ம்மயக்கம் தமிழில் இல்லாமையால் ந்யாயம்-நியாயம், க்யாதி-கியாதி என அடுத்தடுத்து வந்த இரண்டு மெய்யெழுத்துகளைப் பிரிக்க இடையே இகரம் வரும்

பொருள் : யகரம் இகரத்தின் திரிபென்று கூறினோம். 'இன்' என்ற இறந்த கால இடைநிலை இ’ என்று நிற்பதன் திரிபாக யகரம் வருதலின் அதுவும் இறந்தகால இடைநிலையாம். இகரம் பிறவி முதலிய வற்றிற்போலத் தொழிற்பெயர் விகுதியாகவும் வரும் உடம்படுமெய் வாராத காலத்து அகர இகரம் ஒன்றாகி ஐ என ஒலிக்கும் (பிற+ஐ=பிறை) இந்த ஐகாரம் உண்மையில் அ+இ, ஆ+ய் என்பதேயாம் இதனை முன்னரே குறித்துள்ளோம்