பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 த. கோவேந்தன்

போய்த் தொடும் உறுப்புகள் என்று வேறு பிரிக்கும் போது போய்த் தொடும் உறுப்பாகக் கீழிதழே அமையும். இவ்வாறு இதழ்ப் பல்லின் ஒலியாக வகரம் இருந்தாலும், அது ஆங்கிலத்தில் w என்பதுபோல, ஈரிதழ்த் திறப்பொலியாகவும் (Bl-labial) இருந்ததென்று கூறலாம்

(1) அகர உகரம், ஒளகாரம் ஆமென்பர் தொல்காப்பியர். பின்வந்தோர் அவ் என்று சங்ககாலத் திலிருந்தே எழுதிவரக் காண்கிறோம். இவ்வாறு உ-வ மாறுவது வகரம் ஈரிதழொலியாக அமைவதாலேயாம். அரசஞ் சண்முகனார் ஒளகாரத்தில் வகரமிருப்பதாகக் கூறுவது ‘காண்டல் விரோதம்’ என்பர். ஆனால் வகரத்தை ஈரிதழ் ஒலியாகக் கொண்டால் இந்தத் தடையெழுவதற்கில்லை.

(2) பொதுவாக வல்லெழுத்துகள் பிற்காலத்தில் மொழிக்கு முதலிலும், இரட்டித்து வரும்பொழுது மன்றிப் பிற இடங்களில் ஒலிப்புடை வெடிப்பொலியாக (voiced plosives) அமைவதைக் காண்கிறோம். ஆனால் பகரம் இந்த வகையில் b என வாராது வகரமாகவே மாறக் காண்கிறோம். இதனாலேயே எதிர்கால இடைநிலை முதலியவற்றில் பகரமும் வரகமும் இடம் பெறுகின்றன; அங்கே இவை இரண்டும் வேற்றேலியாகாது மாற் றொலியே ஆம். இந்த வகரம் சில திராவிட மொழிகளில் ஒலிப்புடைப் பகரமாகவும் (b) வழங்குகிறது. எனவே, வகரம் பகரத்திற்கு இனமாகவேண்டுமானால் முதலில் இதுவும் ஈரிதழொலியாக அமைந்திருத்தல் வேண்டும்.

(3) மகரம் தம் மூக்கொலியை இழக்கும்போது வகரமாகவே திராவிட மொழிகளில் மாறக் காண்கி றோம். நீம்+இர் நீவிர் எனத் தமிழிலும் காண்க.

(4) இவ்வொலி உகரத்திற்கு நேரினமான இடை யெழுத்து எனலாம். அதனால் இந்த உகரம் மெய்