பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 த. கோவேந்தன்

வகரத்தின்முன் வகரம் வருவது இதுவரை கூறிய வேற்றுநிலை மெயம் மயக்கத்திலும் வேறான உடனிலை மெய்ம் மயக்கமாம் ர, ழ நீங்கிய எல்லாம் உடனிலை மெய்ம் மயக்கமாக வருவனவாதலின், வகரத்தின் முன் வகரம் வந்து உடனிலை மெய்ம் மயக்கமாகும்.

மொழிக்கிடை வரும் தனிவகரமும் இரட்டை வகரமும் பொருள் வேறுபாடுடையன அவை, அவ்வை என்றும் சுவை, கவ்வை என்றும் காண்க எனவே, இவ்விரண்டையும் வேறு பிரித்தே ஆராய்தல் வேண்டும். இரட்டை வகரம் மொழிக்கிடையன்றி வாராது

வகரத்தின் முன்னாக வரக்கூடிய எழுத்துகள் ய், ர், ல், வ், ழ், ள், ண், ன், ம் என்பவை பிற மெய் இதன் முன் உகரச் சாரியை பெறும். வகரத்தின்முன் மகரம் வரும் பொழுது அந்த மகரம் கால்மாத்திரையாய்க் குறுகுமென்பார்கள். இன்று நோக்கும்பொழுது அந்த மகரம் இதழ்ப்பல் ஒலியாக வரும் மெல்லெழுத்தாக (Labo dentainasal) ஒலிக்கக் காண்கிறோம். இதழ்ப் பல்லொலி யாம் வகரத்தின் சாயலை அதுவும் பெறுகிறதெனலாம்

இரட்டை வகரம் இயல்வாக வரும் இடத்தை மேலே கண்டோம் ஆனால் செயற்கையாகத் தனி வகரமே மொழயிடையில் செய்யுள் நெறிபற்றி இரட்டை வகரமாக வருவதும் உண்டு இதனை விரித்தல்விகாரம்’ என்பர் அவி என்பது அவ்வியென்று வருவது போலாம் இவ்வாறன்றி வகரம் தொடங்கும்போது மட்டும் மெல்லெழுத்தாய் நின்று, பன் உரசலின்றி இசைபெற்று உயிர்போல் அலகுபெறுதலும் உண்டு இதனை ஒற்றளபெடை என்பர் இவ்வாறு ங் ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் என்ற மெய்யெழுத்தெல்லாம் ஒற்றள பெடையாய் வரும்

அவ், இவ், உவ் என்பன பழைய செய்யுள்களில் ஆயிடை என்பது போல நீண்டேவரக் காண்கிறோம். மலையாளம் முதலிய மொழிகளில் இன்றும் இவ்வாறு