பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 19

வேறுபடுகிறது வடமொழியும், ஜெர்மன், பிரெஞ்சு முதலான மற்ற ஐரோப்பிய மொழிகளும் அவ்வாறே பலவகையின் வேறுபடுகின்றன ஒரு நாட்டின் பழங் குடிமக்கள் தொடக்க காலத்தில் அமைத்த சொற்றொடரமைப்பு முறையை ஒட்டியே வழி வழியாகபல நூற்றாண்டுகளாக-ஒப்பாக்கம் இருந்து வருதலே அதற்குக் காரணமாகும் ஆகவே ஒரு மொழியில் முதலில் அமைந்துவிடும் ஒருமுறை. பின்னர் நெடுங் காலம் வரையில் ஒப்பாக்கத்திற்கு உரிய அடிப்படையாக விளங்கக் காண்கிறோம் அதனால், எவ்வளவோ மாறுதல்கள் மக்களின் வாழ்வில் நேர்ந்த பிறகும், அவர்கள் பேசும் மொழியில் சில அடிப்படைக் கூறுகள் மாறாமல் நின்று இடையறாமல் வரும் ஒரு மொழி என்று கூறத்தக்க நிலையைக் காட்டுகின்றன

ஆயினும், ஒவ்வொரு மொழியினும் காலப் போக்கில் சிற்சில மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன ஓர் ஊர் அதே பெயரோடு தொன்று தொட்டு இருந்து வர லாம்; பழைய தெருக்கள் பல அப்படியே இருந்துவரினும் புதிய வீடுகள் பல ஏற்படுதல் உண்டு; பழைய வீடுகளிலும் புதிய அறைகள் ஏற்படுதல் காணலாம்; பழைய அறைகளிலும் புதிய கூறுகள் சில இடம் பெறுதல் உண்டு பழைய மொழியில், சொற்தொடரமைப்பிலும், சொல்ல மைப்பிலும், ஒலியமைப்பிலும் ஏற்படும் மாறுதல்கள் அத்தகையனவே அவ்வாறு மாறுதல்கள் ஏற்படு வதற்கும் ஒப்பாக்கம் துணைபுரிகிறது. ஆகவே, மொழி யில் ஒழுங்குமுறை இருத்தலும், புதிய மாறுதல்கள் ஏற்படுதலும் ஆகிய இரண்டிற்கும் ஒப்பாக்கம் வழி வகுக்கிறது எனலாம்

சில நாட்டு மக்கள் விரைந்து பேசிப் பயின்று சொற்களைப் பிரிக்க முடியாத நிலை அடைந்த பின்னர், அந்த மொழியை எழுத்து வடிவில் நிலைநிறுத்தினர் அந் நிலையில் அவர்களின் மொழியில் சொற்களின்