பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 த. கோவேந்தன்

யாலே உத்தாரணம்பண்ணினவிடத்து திருமலையிற் கல்வெட்டு வட்டமாகையினால் தமிழாகப் படி எடுத்து’ என்று அக் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. தெலுங்கு, கன்னட எழுத்துகளைப்போல இவ்வகையும் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக எழுதப்பட்டு வந்ததாலேயே வட்ட வுருவம் அமைந்தது என்று எண்ண வேண்டியிருக்கிறது

இவ் வகை எழுத்தில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் பாண்டி மண்டலத்திலும் மலைநாட்டிலும் மலை நாட்டிலும் காணப்படுகின்றன தமிழ்நாட்டின் மற்றைப் பகுதிகளிலும் முக்கியமாகக் கொங்கு நாட்டிலும் இவ் Ꮆaf ©ᏈᎠ Ꮬ எழுத்தில் வெட்டிய கல்வெட்டுக்கள் கிடைக்கின்றனவாயினும், அந்தப் பிரதேசங்களிலே இவ்வகை தொடர்ந்து வழக்கில் இருந்துவந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்க வில்லை

பாண்டிய நாட்டில் கிடைக்கும் வட்டெழுத்துச் சாசனங்கள் பொதுவாகக் கி. பி பதினோராம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்தனவாகவே உள்ளன சோழர்கள் ஆதிக்கம்பெற்றுப் பாண்டி நாடு சோழ சாம்ராச்சியத்தின் பகுதியாக மாறிய பிறகு அங்கே இதன் வழக்கு வீழ்ந்தது; காலக்கிரமத்தில் இதைப் படிப்பவர்களும் இல்லாமற்போயினர் என்று தெரிகிறது குற்றாலநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களுள் ஒன்று அப்பொழுது வட்டத்தை ஒருவரும் படிக்க முடியாமையால் அவற்றைத் தவிரப் பிறவற்றை வெட்டியதாகத் தெரிவிக்கிறதென்று து. ஆ. கோபி நாதராயர் கூறுவதனின்றும் இது தெளிவாகும். எனினும், சோழர்களுடைய ஆதிக்கத்துக்கு அதிகம் உட்படாத மலைநாட்டிலே இது வழக்கில் இருந்து வந்தது. மலையாளிகள் தங்கள் மொழியை மணிப் பிரவாளமாக்கி, வடமொழிச் சொற்களை அதிகம் கலக்கத் தொடங்கியவுடன், ஆரிய எழுத்து என்று