பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 த. கோவேந்தன்

கொள்கிறார் ஆயினும் தமிழின் திரிபே என்றே எண்ணுகிறார் மஹாராட்டிரர்களுடைய பாலபோதத் திற்கு மோடி என்பது எப்படியோ, (காச்மீரத்து) தோக்ரர்களுடைய சாரதா என்னும் லிபிக்குத் தலகரி என்பது எப்படியோ, அதாவது எழுதும் எழுத்துகள் எவ்வகை உறவு கொண்டனவோ அப்படியே தமிழ் எழுத்துகளும் வட்டெழுத்துகளுமாகும் என்கிறார்

இங்ங்னமாயின் வட்டெழுத்துத் தனியான வளர்ச்சியைப் பெறாது தமிழின் திரிபாகவே இருத்தல் வேண்டும் இவ்விருவகை லிபிகளின் வளர்ச்சி யையும் ஒற்றுமை வேறுபாடுகளையும் நன்றாகக் கவனித் தால் இவ்விருவகையும் தனித்தனி வளர்ச்சியைப் பெற்றி ருந்தன வென்பது புலப்படும் சுமார் கி பி நான்காம் நூற் றாண்டைச் சார்ந்ததெனக்கூறக்கூடிய திருநாதர்குன்றுக் கல்வெட்டால் இது நன்கு தெளிவாகும்

நமக்குக் கிடைக்கும் வட்டெழுத்துச் சாசனங்களில் மிகவும் பழமையானது கி பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது அக் காலத்திலேயே இந்த லிபி நன்கு வளர்ச்சியடைந்து ஒரு தனி வடிவத்தைப் பெற்றிருந்தது கி பி எட்டாம் நூற்றாண்டில் வழங்கி வந்த வட்டெழுத்து, தமிழ் ஆகிய இருவகை லிபிகளையும் ஒப்பு நோக்கினால், ஈ, க, ங், ஞ, ஒ, ல, வ, ழ, ள ஆகியவை ஒரே வடிவத்தையும் பெற்றுள்ளனவென்பது புலப்படும் அ, உ, ஒ, ச, ட, ய ஆகியவை மிகச் சிறு வேறுபாடுகளையே உடையன. கிரந்தம், தமிழ் முதலிய லிபிகள் பிராமி யினின்றும் வளர்ச்சி பெற்றதைப் போலவே வட்டெழுத்தும் பிராமியினின்று வளர்ந்து வந்தது என்பது புலப்படும்

இவ் வகையில் பொறிக்கப்பட்ட சாசனங்களை ஆராய்வதில் இரண்டு குறைகள் உண்டு காலத்தை நிச்சயமாகக் கூறக்கூடிய வட்டெழுத்துகள் அதிகமாகக் கிடைக்காதது ஒன்று; பிற லிபிகளைப்போலன்றி உயிர்