பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 215

இது தமிழ் மெய்யெழுத்து வரிசையில் பதினான் காம் எழுத்து இடையெழுத்தில் ஒன்றென்று இலக்கணப் புலவர் கூறுவர் இஃது ஒலிப்புடை ஒலி தொல் காப்பியத்தின்படி ரகரமும் றகரமும் பிறக்கு மிடத்திலேயே இதுவும் பிறக்கும் (சூ 94) அவர் அணரி துனிநா அண்ணம் வருட ரகரமும் ழகரமும் பிறக்கும் என்பர் (கு 95) எனவே இவை நாமடி எழுத்து எனலாம், இன்று வல்லண்ணத்தில் இடைவரையில் நாநுனி செல்ல ழகரம் பிறக்கின்றது. ஷ என்பது ஒலிப்பிலா ஒலியானால் அதற்கேற்ற ஒலிப்புடை ஒலியாக ழகரம் அமையு மெனலாம் ஆனால் ஒரு சிலர் ஒலிக்கும் முறையில் ழ என்பது உரசுதலில்லாது தொடர்ந்து ஒலிக்கும் ஒலியாக ஒலிக்கக் காண்கிறோம் ஆனால் இன்று ரகரம் பிறக்குமிடத்தில் இது பிறப்பதில்லை பிரேகு என்ற நகரத்தில் இதனை ஆராய்ந்த பொழுது வாயில் முன்னொலியாக அமைந்த ரகரத்திற்கு ஒப்ப அண்ணத்தி னிடையே ஒலிக்கும் ஒலியாக ஒலிக்கக் கண்டனர். இந்த ழகரம் ரகரம் போல நாவானது அடுத்தடுத்து அசைவதால் ஒலிக்கும் என்பர் கமில் சுவெலெபில் போன்றார் சிலர். இது ளகரம் போல நாவின் இரு ஓரங்களிலும் மூச்சொலி நழுவிப் போவதால் எழுவது அன்று; இதனை ஒலிக்கும்போது நாவின் இரு ஓரங்களும் அண்பல்லை ஒட்டி நிற்கக் காண்கிறோம் அடிநா அடியண்ணத்தை நோக்கி வீங்கி நிற்கவும் காண்கிறோம். இதனால் அவற்றின் பின்னே யகரம் நீங்கிய இடையெழுத்துகள் ஒலிக்கும்போது உகர ஒலி விடு ஒலியாகக் கேட்கும்.