பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 த. கோவேந்தன்

உறுப்புகளைப் பிரித்துணர்தல் அரிதாயிற்று அத் தகையமொழிகளை உட்பிணை நிலையில் உள்ளவை (Inflexional languages) என்பர் தமிழகம் முதலிய சில நாட்டு மக்களிடையே எழுத்து முறை தோன்றிய காலத்தில், சொற்களின் உறுப்புகளைப் பிரித்துணர்தல் எளிதாக இருந்தது அம்மொழிகளை ஒட்டு நிலை மொழிகள் (Agglutinative 1) என்பர். சீனம் முதலான சில நாடுகளில் எழுத்து முறை வளர்ந்த காலத்தில், சொற்கள் சிறு வடிவினவாய்ப் பெரும்பாலும் ஒரசைச் சொற்களாய்அடிச் சொற்களாய்-இருந்தன. அந் நாட்டு மொழிகள் தனிநிலைமொழிகள் (solative 1) எனப்படும் ஆயினும், ஒவ்வொரு மொழியிலும் இம் மூன்று கூறுகளும் மிக்கும் குறைந்தும் காணப்படுவன எனலாம்

மொழியியல் இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு முன், வெவ்வேறு நிலைகளைக் கடந்துவந்துள்ளது எனலாம் முதலாவது, எழுத்து மொழியை ஆராய்ந்து, இலக்கியங் களை ஆய்ந்து, அந்த மொழியின் எழுத்துகளும், சொற்களும், சொற்றொடர்களும் இவ்வாறு உள்ளன என்று கூறும் இலக்கணம் அமைந்த நிலை அதுவே மொழியியலின் தோற்றத்திற்கு இடப்பட்ட கால்கோள்

எனலாம்

இரண்டாவது, பழைய நூல்தளை ஆராய்ந்து, அவற்றின் தொடர்களைத் திருத்தவும் விளக்கவும் கூடிய வகையில் மொழியின் அமைப்பு இன்னது என்று வகுத்த நிலையாகும்

மூன்றாவதாக, ஒரு மொழியை மட்டும் ஆராய்வதோடு நிற்காமல், அதனோடு தொடர்பு கொண்ட சில மொழிகளை ஆராய்ந்து ஒப்பிட்டு, அவற்றின் பொதுத்தன்மைகளையும் சிறப்பியல்பு களையும் உணரும் ஒப்பியல் முறை வளர்ந்தது மொழிகளின் இலக்கணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, ஒப்பியல் மொழி நூல்கள் எழுதிய நிலை இதுவாகும்