பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 219

ழகார ஈற்றுச் சொல்லின் முன் வல்லினம் வந்தால், வேற்றுமையில் அந்த வல்லினம் இரட்டிக்கும் இது பழைய விதி தாழ்க்கோல், தாழக்கோல் என்றும், பழங்காலத்தில் வரும் தமிழ் பெற்றும், பெறாதும், வல்லொற்று மிக்கும் வரும். ஆனால் அகரச் சாரியை வருவது பிற்காலத்தில் வழக்கற்றுப் போயிற்று. ழகர ஈறு ளகர ஈறு போலச் சந்தி விதி பெறுமென வீரசோழியம் கூறுவதை முன்னரே குறித்தோம்

தாழ் என்பது தமிழ் நாட்டில் தாள் என்றே வழங்குகிறது இந்த ழகரம் சென்னையில் அறியாதார் சிலர் வழக்கில் ய என்றும் (பழம்>பயம்), சிலர் வழக்கில் ச என்றும் (இழுத்து>இசித்து), தென்னார்க்காடு செல்லச் செல்ல ஷ என்றும் (விழா > விஷா, திருமழிசை > திருமவிசை) தெற்கே ள என்றும் ஒலிக்கும் பயம் என்பது சங்க கால வழக்கெனக் குறிப்பிடல் வேண்டும். பழங்காலத்திலேயே ழகரம் ஆசிடையிட்ட எதுகையில் வந்து மறைவதுண்டு இத்தகைய மறைவை வாழ்ந்தோம் > வாந்தோம் என்ற உலக வழக்கிலும், போழ்து > போது என வரும் இலக்கிய வழக்கிலும் காணலாம். வாந்தோம் என வரும்போது ஆகாரம் மூர்த்தண்ணிய உயிரொலி யாக இருக்கக் காண்போம் ஆங்கிலத்தில் Bird முதலிய சொற்களில் வரும் உயிரொலி இத்தகைய தென்பர். Government என்பதனைக் கவழ்மென்டு என்று எழுதுவதும் உண்டு. இந்த உயிரொலியை ஒலிக்கப் பழகி, ழகரத்தை எளிதில் ஒலிக்க இயலும் என்பாரும் உளர் ஷகரத்திற்கு ஒத்த ஒலிப்புடை ஒலியை ஒலித்துப் பின் அதில் உரசலிலாது ஒலித்தால் இவ்வொலி வரும் வட மொழியில் உள்ள ஷ தமிழில் ழ ஆக மாறும். (கஷாயம் > கழாயம், பாஷை > பாழை), வடமொழி ரகரம் தமிழில் ழகரமாதல் உண்டு. (அமிர்தம் > அமிழ்தம்) வட மொழியில் வரும் நாடி என்பது தமிழில் நாழி ஆயிற்று என்பாரும் உளர். இதனை நாடுரி என்பதில் காணலா மென்பர். -