பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 த. கோவேந்தன்

தெலுங்கிலும், கன்னடத்திலும் இந்த ழகரவொலி பழங்காலத்தில் இருந்ததெனலாம் இன்றும் மலையாளத் தில் எங்கும் ஒரு நிகராய் ஒலித்துவரக் காண்கிறோம் எனவே இது தாய்த்திராவிடத்தில் இருந்த ஒலியாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.

தமிழ் மெய்யெழுத்து வரிசையில் 16ஆம் எழுத்து. இது உயிர்ப் பொலி இன்று நாமடி ஒலியாக அண்ணத்தின் உயரத்தே ஒலிக்கின்றது நாவின் இரு ஒரங்களிலும் காற்று வாய்க்கு வெளியாக வந்துவிடும்; எனவே இன்று இது ஒர ஒலியுமாகும் (Lateral)

தொல்காப்பியர் காலத்தில் இது நாவினிம்பு வீங்கி அண்ணத்தை வருடப் பிறக்குமொலியாக நின்றது. அங்கே நா அணரி அண்ணத்தை வருடுவதைத் தொல் காப்பியனார் கூறினாரில்லை. ழகரத்திற்கே நாதுனி அணரி அண்ணத்தினை வருடும் நிலையினைக் கூறி யுள்ளார் அவர் காலத்தில் அணர்தல் இல்லாமையே ழகரத்திற்கும் ளகரத்திற்கும் உள்ள வேற்றுமை. அணர்தல் முழுதுந் தோன்றாத நிலையில் சோழர் காலத்தே இவையிரண்டும் மயங்கத் தொடங்கின. ஆனால் வட தமிழ்நாட்டில் இவை இரண்டும் இன்றும் வேறுபட்டே ஒலிக்கின்றன. இங்கே வேறு வகையான தொரு வேற்றுமை நிலைபெறக் காண்கிறோம். த, ட, என்றும், ந, ண என்றும், வாயின் முன்னொலியும் பின்னொலியும் அல்லது நாவின் தாழொலியும் உயிரொலியும் ஆக இவை இணை இணையாக அமைவது போல லகரமும் ளகரமும் அமைந்திருக்