பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 221

கின்றன எனலாம் இந்த வேற்றுமை காரணமாக ளகரமும் ழகரத்தினின்று வேறுபட்டது; ழகரம் ஒர ஒலி ஆகாமை காண்க ஈரோடு முதலிய இடங்களில் லகரளகர வேற்றுமையுங்கூட மறைந்துவரக் காண்கிறோம்

ளகரம் சிலபோது வல்லெழுத்துச் செறிவால் உயிர்ப்பிலா ஒலியாக மாறும். அப்போது இது டகர ஒலி போன்றதாம். ஆதலின் அந்த நிலையில் ளகரம் டகரமாக மாறும் என்று இலக்கணப் புலவர்கள் கூறி வந்தனர். (கள்+குடி=கட்குடி) ஆனால் 12ஆம் நூற்றாண்டுக்குள் ளேயே இந்த நிலையிலும் ளகரத்தையே எழுதி வரக் காண்கிறோம். ஆனால் அப்போது அதனுடன் செறிந்து வந்த வல்லெழுத்து இரட்டித்து எழுதப்படும் (கள்+குடி-கள்க்குடி) இவ்வாறு மலையாளத்திலும் எழுதிவருதலைக் காண்கிறோம். தென்னாட்டு ஒலைச் சுவடிகளில் இந்த நிலையே தோன்றுகிறது

எனவே, வல்லினம், ளகரத்தின் பின் வந்தாலும் தொகைச் சொற்களில்போல ளகரத்தோடு மிகச் செறிந்து வாராதபோதும் ளகரம் உயிர்ப்பொலியாகவே நிற்கும். (உ-ம்) வாள் பெரிது. வாட்பெருமை என வரும்போது தொகைச் சொல்லாகி, இரண்டு சொல்லுக்கிடையே சொல்லீற்றிசை (Word pass or juncture) அல்லது விளம்பம் லலாமையை உணரலாம். தொகைச் சொல்லுள்ளும் வினைத்தொகையில் இத்தகைய செறிவு எழுவதில்லை (கொள்கலம்). சிலபோது உம்மைத் தொகையிலும் (எள்கொள்) எழுவதில்லை. ஒரு சொல்லினுள்ளும் “கொள்கின்றான்” “கேட்கின்றான்” எனச் செறிவில்லா மையும் செறிவும் ளகரத்தின்பின் தோன்றக் காணலாம். மீள்கின்றான் மீட்கின்றான் என்ற இடத்தில் இந்த வேறுபாடு தன் வினை, பிறவினை என்ற வேறுபாட்டை உணர்த்தல் காண்க.

ளகரத்தின் பின் க, ச, த, ப, வ, ய என்ற மெய் எழுத்துகளே வந்து மயங்கும். இதன்முன் தகரம் வந்தால் தகரம் டகரமாகும். அப்போது ளகர ஈற்றுச் சொல் தனிக்குறிலின்முன் வந்த சொல்லீறினால் அதுவும்