பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 த. கோவேந்தன்

உயிர்களுக்குமிடையே வேற்றுமை இல்லை. நாஞ்சில் நாடு முதலிய இடங்களில் இந்த இரண்டெழுத்திற்கும் வேற்றுமையுண்டு. ரகரமே நாம் மேலே குறிப்பிட்டபடி ஒலிக்கப்பெறும். ரகரம் தமிழ் மெய்யெழுத்து வரிசையில் பன்னிரண்டாவது, றகரமே ஒரு முறையின்றி இரண்டு மூன்று முறை துடிக்கும் நாத்துடிப் பொலியாக (Trill) அமைந்து, ரகரத்தினும் வேறுபடுகிறது. சிலபோது அண்ணத்தைச் சிறிது பின்னாக நா வருடுதலால் றகரமும், முன்னாக வருடுதலால் ரகரமும் பிறக்கும் வகையில் எழும் வேற்றுமையும் உண்டு

தொல்காப்பியர் காலத்தில் றகரம் வல்லெழுத்தாம் ஒலிப்பிலா வெடிப்பொலியாக அமைந்தது; நா துனி அண்ணத்தை ஒற்றுவதால் பிறந்தது. எனவே நா மடிதல் மேல்நோக்கிச் சிறிது வளைதல் என்ற பொருளில் இதற்கன்றி டகரத்திற்குப் பொருந்தாது. ஆனால் வடமொழி அறிவு பெருகிய பல்லவர் காலத்தில் தமிழ் டகரம் வடமொழி மூர்த்தண்ணிய நாமடி டகரம்போல எழுதப் பெற்றதாய், அவ்வாறே ஒலிக்கவும் பெற்று நாமடி எழுத்தாகியது. றகரம் அதனால் மாறத் தொடங் கியது. இரட்டை றகரம் இரட்டைத் தகரமாக மாறி யுள்ளதனைச் சோழர் காலத்தில் இன்று போலக் காண்கி றோம். (முற்று>முத்து). வல்லெழுத்தின் முன் வரும் ரகர றகரங்கள் மயங்கத் தொடங்கின; அங்கே அவ்விரண்டிற்கும் வேற்றுமை தெரியாமல் போயிற்று. பின்னர் உயிர் எழுத்துகளின் இடையிலேயும் ஒன்றாகி மயங்கின. ஆனால் இலக்கியத்தில் மட்டும் தொல்காப் பியர் காலத்தில் போலவே எழுதி வந்தனர். இதனால் பள்ளிக்கூடத்தில் தனி எழுத்துகளைக் கற்கும்போது ரகர றகரத்தை மேலே கூறியதுபோலவே நாஞ்சில் நாட்டில் வேற்றுமை காட்டி ஒதுகின்றனர். பெரும் பான்மையும் பிற இடங்களில் உயிர்களுக்கு இடையில் ரகரமும் றகரமும் ஒன்றாகிப் போயின. இந்த ரகரக் கூறினால்