பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 21

இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர், தம்மொழி களோடு சமற்கிருதத்தை ஒப்பிட்டுப் பல பொதுத் தன்மைகளைக் கண்டு வியந்தனர் அப்போது, தோன்றி வளர்ந்த ஒப்பியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து, பல வேறு மொழிகளின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அறிஞர் பலர் பல புதிய உண்மைகளைக் கண்டு உணர்த்தினார்கள். அந்தப் புதிய ஆர்வத்தால், சில தவறுகளும் இடம்பெற்றன. ஆயினும், பிறகு வளர்ந்து அமைந்த மொழி இயல் ஆராய்ச்சிக்கு அந்த அறிஞர் களின் உழைப்பே வழிகாட்டியாக விளங்கியது

இந்த மூவகை நிலைகளிலும் ஆராய்ந்தவர்கள், எழுத்து மொழியையே - இலக்கியம் முதலியவற்றின் கண்ட மொழியையே தம் தம் ஆராய்ச்சிக்கு உரியதாகக் கொண்டு, பேச்சு மொழியைப் புறக்கணித்தார்கள் அதனால் விளங்கத்தக்க உண்மைகள் பல விளங்காமற் போயின. பேச்சு மொழியே, உயிருள்ள மொழியாகும். எழுத்துமொழி, கற்றவர்கள் சிலர் கூடி அமைத்துக் கொண்டது. பேச்சுமொழி வாழும் மனிதனைப் போன்றது எழுத்துமொழி அவனுடைய படத்தைப் போன்றது

மனிதன் படம்போன்ற எழுத்து மொழியை மட்டும் ஆராய்ந்த காரணத்தால், தவறுகள் பல நேர்ந்தன தமிழ்மொழியில் உயிர்மெய் என்பதைப் பிற்காலத்தார், ஒரெழுத்தாகக் ாெண்டமைக்குக் காரணம், அதுவே Thick என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள மூன்றே ஒலிகள் (த்இக்) இருக்கவும், அதை ஐந்தெழுத்தால் ஆன சொல் எனக் கொள்ளும் தவறும், அதனால் நேர்ந்ததே ஆகும் இலக்கண நூல்களில் தெளிவின்மையும், குழப்பமும், ஆங்காங்கே இருத்தலுக்கும் அதுவே காரணமாகும்

பேச்சு மொழியை ஆராய்தல் எளிது அன்று; எழுத்து மொழியை ஆராய்தல் எளிது. பேச்சுமொழி