பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 த. கோவேந்தன்

சேந்தான். பார்த்தான் - பாத்தான்). ஒரு மெய்யின் முன்வரும் போதும், செய்யுளில் அதன் இருப்பினைக் கணக்கில் எடுக்காமலே சீர் பிரிக்கும் அளவிற்குப் பழங்காலத்திலேயே ஒலித்தல் பெற்றது. சேரர்பிரான் என்பது கூவிளங்கனியாகும்; ர் என்பது அங்கு இல்லா ததுபோல ரபி ஒரு நிரையாகும். இத்தகைய நிலையைப் பதினோராம் திருமுறையிலேயே காணலாம்.

ரகர லகரப்போலியும் உண்டு. (பந்தல் = பந்தர்); இன்றும் ரப்பர் = லப்பர் என வழங்குதல் காணலாம்

றகரம் பழங்காலத்தில் மொழிக்கு முதலாவது இல்லை; ஈற்றில் வருவதில்லை. குற்றியலுகரமாக முடிந்தது பழந்திராவிடத்தில் றகரம் ஈற்றில் வந்ததனைக் காட்டும் என்பர். இந்த றகரம் தன்னொடுதானே மயங்குவதோடு, தகரம் டகரம் நீங்கிய பிற வல்லெழுத் தோடும் மயங்கும். (எற்கு, எற்பு, பொற்பு, கற்சிறை). லகரமும் தகரமும் சேர்ந்து ற எனவாகும் இதனைத் தகரம் றகரமாக மாறிற்று என்றும், லகரம் தனிக் குறிலின்பின் வாராத நிலையில் மாறும் என்றும், தனிக் குறிலின்பின் வரும்போது லகரம் றகரமாக மாறும் என்றும் இலக்கண நூல்கள் கூறும் தனிக்குறில் முன் அவ்வாறு இரட்டை றகரம் வரும்போது முற்காலத்தில் ஆய்தமும் மாற்றொலியாக வந்தது. கற்றீது, கஃறீது எனக் காண்க. னகரத்தின் முன்வரும் தகரமும் றகரமாகும். பொன்தருவான்=பொன்றருவான். லகர ரகர மா றாட்டம் திசை மொழிகளில் நாம் குறித்ததை ஒட்டி ரகர தகரமும் றகரமாகும்போலும் (கார்>கர்-து) கறு, கறுப்பு) இவ்வாறு பல சொற்களைப் பிரித்துக் காணலாம். (நில்+து-நிறு). சொல் (நெல்)+து=சோறு), லுகரம் ஈறாக வரும் இடங்களில் இவ்வாறு காணலாம் போலும்,

இந்த றகரத்தின்பின் கசதப தவிர வேறு மெய் யெழுத்து வாராது. றகரம் ரகரமான பின் ரகரத்தைப் பற்றி, முன்கூறியபடி எல்லாம் இதுவும் வரக் காண்கிற்ோம். R *