பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 231

முன்னர் ரகரம் பல சொற்களில் ஈறாக உள்ளது. பின் நீயிர் என்பதிற்போலப் பன்மையை உணர்த்த வந்தது. அற்று என்ற சாரியையும் அர்+து>அற்று என்று கொள்ள இடமுண்டு பின்னர் உயர்நிலைக்கே உரிய தாய்ப் பலர்பால் விகுதிகளில் அதாவது அர் ஆர் இர் (மகளிர்) என்பவற்றில் சிறப்பு நிலையாக அமைந்தது.

ன கரம் தமிழ் மெய்யெழுத்து வரிசையில் பதினெட்டாவதாக அமையும் கடைசி எழுத்து. இது தொல்காப்பியர் காலத்தில் நுனியண்ணத்தின் ஈற்றில் நா அணர்ந்து ஒற்றுவதால் எழும் றகரத்திற்கு இனமாக மூக்கு வளியோடு ஒலிக்கும் ஒலிப்புடை மெல் லொலியாகும். பழந்திராவிடத்தில் நகரத்தோடு இதற்கு வேற்றுமை இல்லை எனலாம் தொல்காப்பியர் காலத்தில் வெரிந்-வெரின் எனக் கடையிலும் முந்நூறு முன்னூறு எனத் தொகையின் இடையிலும் பொருள் வேறுபட்டு வருவதால் நகரத்திலும் வேறான ஒலியனே ஆம். னகரம் மொழிக்கு முதலாக வாராது.

இடையில் அனை-அன்னை என ஒன்றை மெய்யும் இரட்டை மெய்யுமாய்ப் பொருள் மாறி வருவது காண்க இதன்பின் றகரம் பெரும்பான்மையும் வரும். க ச ஞ ப ம வய என்ற மெய்யெழுத்துகளும் வரும் இதன்முன் உயிர் எழுத்தே வரும் ஈற்றில் வரும்போது ஏவல் நீங்கிய வினை வடிவங்களல்லாதபோது உகரச்சாரியை பெறும் (பொன்-பொன்னு). யகரம் மொழி முதலாக இந்த ஈற்றின்பின் வரும்போது இகரம் வருவதும் உண்டு. (தேன்+யாது-தேனியாது).