பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 235

வலியாகவும் (தேங்குடம், நாம்+பிரிந்தார்> நப்பிரிந்தார்) மாறுவதும் உண்டு பழங்காலத்தில் இதன் பின் வரும் யகரம் ஞகரமாதலும் உண்டு (பொன்+யாத்த> பொன்ஞாத்த)

பல்லவர் காலத்திற்குள் நகரம் மொழிக்கு ஈற்றில்

வருவது மறைந்தது தொகையிலன்றி நகரம் இடையில் வருவதும் இல்லை றகரமாற்றம் இதனையும் மாற வைத்தது. இதனால் மொழிக்கு முதலில் மட்டும் வந்தால் ந என எழுதுவதும் பிறவிடத்தில் ன என எழுதுவதும் வழக்கமாகிவிட்டது. னகர நகரங்கள் பிற்காலச் சோழராட்சியில் முழுவதும் மயங்கி ஒன்றாகிவிட்டன. அதன் ஒலி பழைய னகர ஒலியே அன்றிப் பழைய நகர ஒலியன்று பந்து முதலியவற்றிற்போலத் தகரத்தின் முன் மட்டும் நகரம் பல் லொலியாம். பிறவிடங்களில் முதலிலும்கூட பழைய னகர ஒலியேயாம். இதனால் இடைக்காலத்தில் நகரம் ரகரத்தோடு மோனை கொள்ளக் காண்கிறோம். ஒன்று முதலிய சொற்களில் உள்ள றகரமும் மெல்லொலியாகப் பிற்காலத்தில் மாறியது. ஒன்று-ஒண்னு கன்று-கண்ணு என்ற ஒலியும் காண்க.

னகரம் மிகப் பழங்காலத்தில் யான்யாம், தான் தாம், நின்,தும் என்பவற்றில்போல ஒருமை விகுதியாக நின்றது. அந்த நிலை மாறியபின் அஃறிணையில் ஈற்றில் னகரமும் மகரமும் மாறாடி வந்தன. அறம் அறன். இரண்டு தனிக் குறிலுசையில் வரும் மெல்லெழுத்தே இவ்வாறு மாற்ாகும் என்பது நன்னூலுக்கு உரை எழுதியோர் பிற்காலத்தே கண்ட நியதி. னகரம் ஆண்பால் ஈற்றில் வரும்போது இவ்வாறு மாறாடுவதில்லை. இந்த னகரம் ஆண்பால் ஈறான அன் ஆன் ஒன் ஒன் என்பவற்றில் சிற்ப்பியல்பாகும்.

s _கருக்கெழுத்து (Short hand) : ஒருவ்ர். பேசும்போது அவ்ர்பேசுவதைப் பேசியவாறே எவராலும் சாதாரண