பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 த. கோவேந்தன்

முறையில் எழுத முடியாது வேகமாகப் பேசுகின்ற வர்கள் நிமிஷம் ஒன்றுக்குச் சுமார் 160 வார்த்தைகள் வீதம் பேச முடியும் ஆனால் நிமிஷத்திற்கு 60 வார்த்தை கள் வீதம் கூடத் திறமை மிக்க எழுத்தாளராலும் எழுத முடியாது. ஆகவே, ஒருவருடைய பேச்சை அப்படியே எழுதவேண்டுமானால், சுருக்கமான குறியீட்டு முறையில் தான் எழுதமுடியும். இம்முறையே சுருக்கெழுத்து முறை எனப்படும். நிமிஷத்திற்கு 250 வார்த்தைகள் வீதம் எழுதக்கூடிய சுருக்கெழுத்தாளரும் உள்ளனர். சாதாரண மாக நிமிஷத்திற்கு 150 வார்த்தைகள். வீதம் சுருக் கெழுத்து முறையில் எழுதலாம்.

சிறந்த ரோமானியப் பேச்சாளரான சிசரோவின் செயலாளராக இருந்த மார்க்கரு டல்லியரூ டைரோ கி. மு. 100-ல் சுருக்கெழுத்து முறையைக் கண்டு பிடித்தார் இவர் கண்டு பிடித்த முறை சாதாரணமாக எழுதும் சொற்களின் விகுதிகளை விடுத்தும், சொற்களைக் குறிக்கச்சொற்களின் முதல் எழுத்தைமட்டும் வைத்துக் கொண்டும் சொற்களைச் சுருக்கமாக விரைவில் எழுதும் முறையேயன்றி வேறன்று ரோமாபுரியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இம்முறையே நீண்ட காலம் வழங்கியது. இம் முறையைப் பலரும் விரிவுபடுத்திப் பயன்படுத்தி வந்தனர் கி. பி. 400-ல் சுமார் 13,000 குறியீடுகள் இம் முறையில் இடம் பெற்றிருந்தன பண்டைய கிரேக்கரும் ஏதோ ஒருவகைச் சுருக்கெழுத்து முறையைப் பின்பற்றி வந்தனர். ரோமானியரின் வீழ்ச் சிக்குப் பிறகு இச் சுருக்கெழுத்து முறை மறைந்துவிட்டது. டிமத்தி பிரைட் என்ற ஆங்கிலயர்தாம் முதன் முதலாகச் சொற்கைைளக் குறியீடுகள் கொண்டு எழுதும் முறையை 1588-ல் கண்டுபிடித்தார். இது நடைமுறையில் மிகுந்த பயன் தரத்தக்கதாக இல்லாவிட்டாலும், இத் துறையில் முயல மற்றவர்களை ஊக்கியது. சர் ஐசக்