பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 237

பிட்மன் என்ற ஆங்கிலேயர் 1837-ல் தம் சுருக்கெழுத்து நூலை வெளியிட்ட பின்னரே சுருக்கெழுத்து முறை உலக முழுதும் பரவத் தொடங்கியது காபல்ரூ பெர்கர் என்ற ஜெர்மானியரும், ஏமீல் டியூப்ளவாயே என்ற பிரெஞ்சுக் காரரும் இத் துறையில் பாடுபட்டவர்களாவர்.

பிட்மன் சுருக்கெழுத்து மொழியின் ஒலிமுறையை அடிப்படையாகக் கொண்டது 1852-க்குள் வாணிகத்தில் வழங்கும் ஒவ்வொருவகை ஒலிக்கும் ஏற்ற குறியீடு அமைத்துத் தம் சுருக்கெழுத்து முறையை இவர் ஒழுங்கு படுத்தினார். ஆங்கில மொழியிலுள்ள ஒவ் வோரடிப் படை ஒலிக்கும் ஏற்ற குறி இத்திட்டத்தில் உண்டு மெய் யெழுத்துக்கான குறியீடுகள் அநேகமாக நேர்கோடுகள் அல்லது வளைகோடுகள்; எனவே சிரமமின்றி எளிதில் விரைவாக எழுத ஏற்றது; குறியீடுகளையும் ஒன்றோ டொன்று இணைப்பது மிக எளிது. அடிக்கடி வரக்கூடிய ஒலிகளுக்கேற்ற சுருக் கெழுத்துக்களும், தொகுத்த ஒலி களுக்கேற்ற ஒற்றைக் குறியும் இத் திட்டத்தில் உண்டு இத் திட்டத்தின்படி ஒருவர் எழுதிய சுருக்கெழுத்துப் பிரதியை மற்றொருவர் எளிதில் படித்துச் சாதாரண முறையில் எழுத முடியும் இருபதுக்கு மேற்பட்ட வேற்றுமொழி களில், பிட்மன் முறையைப் பின்பற்றிச் சுருக்கெழுத்து முறை ஏற்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது

ஜான் ராபர்ட்கிரெக் என்பார் 1888-ல் வகுத்த சுருக் கெழுத்து முறை கிரெக் முறை எனப்படும். கிரெக் இம் முறையை இங்கிலாந்தில் கண்டுபிடித்து அமெரிக்காவில் பரப்பினார். இம் முறையும் எழுத் தொலியைப் பின்பற்றி யதே இம் முறையே உலகில் மிகுதியாக வழங்கு கிறது.

ரூ லோன்-டியூப்ளவாயே முறை ஜே. எம். ரூ லோன் என்பவரால் 1882-ல் டியூப்ளவாயே முறையை ஆதாரமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டது. இது எளிய வடிவ கணித முறையாகும். இது ஆங்கிலம் பேசும் நாடுகளில்