பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 239

பேசும்போது அடிக்கடி வரும் வார்த்தைகளின் பட்டியல் இவரது திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. சிறப்பான சில வார்த்தைகளைச் சுருக்கு முறையில் எழுதும் வகையும் விளக்கப்பட்டுள்ளது. இவருடைய முறையில் உள்ள ஒவ்வொரு விதியையும், தத்துவத்தையும் பல எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கியுள்ளார்.

தொல்லெழுத்தியல்: (நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளி, குஜராத்தி முதலானவை): ஆதி இந்திய எழுத்து சித்திரம் போன்றது. அது மொகஞ் சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த முத்திரைகளில் காணப்படுகிறது. அதை இன்ன எழுத் தென்று கண்டு பிடிப்பதும், அதன் பொருளை அறிவதும் முடியாமலிருக்கின்றன. வரலாற்றுக் காலத்தின் ஆதி எழுத்துகள் பிராமியும் கரோஷ்டியும் ஆவன. இந்த இரு எழுத்துகளையும் அசோகர் தம் முடைய சாசனங்களில் கையாண்டிருக்கிறார். அசோகர் காலத்தில் வழங்கிய எழுத்துகள் அவருடைய அறிக்கைகளுக்கு முன் பல நூற்றாண்டுகளாக முன்னேற்றம் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் சாசனங்கள் நாடெங்கும் பலவித எழுத்து வகைகளிலிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பண்டைய பிராமிய பொது வெழுத்தி லிருந்து வளர்ந்தவை. இந்தியாவில் ஒரெழுத்திலிருந்து மற்றொன்றைப் பிரிக்கும் திட்டமான குறிகள் ஐந்தாம் நூற்றாண்டிற்கு மேற்பட்டுக் காணப்படும்.

குப்தர் காலத்தில் வழங்கிய மிகவும் பிற்கால வடிவ பிராமி எழுத்து திட்டமான இரு பிற்கால வகைகளைக் குறிப்பிடுகிறது. இவற்றில் ஒன்று குடில எழுத்துக்கு முந்தியது. அதனுடைய மிகப் பழைய தோற்றம் மந்தசோர் சாசனத்தில் காணப்படுகிறது. இதிலும் இடை அடையாளங்களையும், உட்பிரிவு எழுத்துகளையும் காட்டும் பேனா வீச்சுக்களும் கோடுகளும் மிகவும் தனிப் பட்டவை. ஏழாம் நூற்றாண்டில் பேனா வீச்சுக்கள்