பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 24?

சாசனங்களில் காணப்பட்ட எழுத்துகளின் வடிவத்தி லிருந்து வளர்ந்தவையாகும்.

ஏழாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வழங்கிய எழுத்து, கன்னோசிக்கு, அருகில் கங்கைப் பிரதேசத்தி லிருப்பவற்றிலிருந்து வேறானதன்று. அது சசாங்க னுடைய செப்பேடுகளில் காணப்படுகிறது. கி. பி. 9, 10, அம், நூற்றாண்டுகளில் உண்டான பால சாசனங்கள் அப்பகுதியில் உண்டான வளர்ச்சியைக் காட்டுகின்றன. 12ஆம் நூற்றாண்டு சேன எழுத்து திட்டமாக வங்காளிக்கு முற்பட்ட வகையினதாகும். இதற்குச் சிறந்த சான்று தியோபரா சாசனமாகும். வங்காளம், அரூ ஸாம், மிதிலை இவ்விடங்களில் இப்போது வழக்காற்றிலுள்ள எழுத்து பதினைந்தாம் நூற்றாண்டினதான கிருஷ்ண கீர்த்தனக் கையெழுத்துப் பிரதியில் உள்ள எழுத்தி லிருந்து உண்டானதாகும்.

பதினோராம் நூற்றாண்டில் மேற்கிந்தியாவில் வழங்கிய எழுத்து, கன்னோசியில் பயன்பட்ட நாகரியே யாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் அதுவே வழக்காற்றிலிருந்தது. தக்கணத்து நந்திநாகரியைப் போன்ற பிற்கால எழுத்தில் மேற்கோடு முக்கிய மாயிருந்தது. இக்காலத்துக் குஜராத்தி எழுத்து, மத்திய கால இறுதியில் மாளவத்தில் வழங்கிய மேற்கோடு களில்லாமல் நாகரியை ஒத்ததாகும். ஆபு மலையிலுள்ள சாசனங்களில் உச்சிக் கோடுகள் காணப்படுகின்றன. பிற்காலத்தில் உச்சிக்கோடுகளற்றதாக மாறியதுதான் இக் காலத்து குஜராத்தி எழுத்தாகும்.

பெட்டித்தலை போன்ற ஆதிக்கடம்ப எழுத்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு குப்த வாகாடக முறையைப் பெரும் பாலும் ஒத்திருக்கிறது. அது மேலைக் காங்கவுக்கு முன்னோடியாகும். இந்த மேலைக் காங்க என்பது பாதாமியிலிருந்த மேலைச் சாளுக்கியர்கள் கையாண்ட ஆறாம் நூற்றாண்டு எழுத்தைப் பெருவாரியாக ஒத்திருக்கிறது.