பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 த. கோவேந்தன்

வாய்ந்த இனமொழி ஒன்றும் வடமேற்கு எல்லைப் புறத்தில் மிகப் பண்டைக்காலத்திலிருந்து வழங்கி வந்தது. இதற்குத் தரதம் என்று பெயர். இதன் பேச்சு வழக்கையே பைசாசம் என்ற பிராகிருதம் என்பர் பைசாசத்திற்கும் திராவிட மொழிகளுக்கும் மெய்யெழுத்துகளில் ஒற்றுமைகள் காணப்படும்

இந்த இடைக்காலத்திலேயே பேச்சிலிருந்த இம்மொழிகள் தாமும் இலக்கியத்தில் கவிகளால் கையாளப்பட்ட காரணத்தால் சமரூ கிருதம்போல் ஒருமுகமாய் இலக்கணம் அமையப்பெற்றுப் பேச்சு வழக்கிலிருந்து விலகி, இலக்கிய வழக்கில் ஏறின மேற்சொன்ன பிராகிருதங்கள் பேச்சில் எவ்வகை யாய் உலவி வந்தனவோ, அவ் வகையை அபப்பிரம்சம் என்பர் அபப்பிரம்சம் என்றால் இலக்கணம் வழுவியது என்று பொருள்.

இடைக்காலத்தில் அபப்பிரம்சங்களும், பேச்சி லிருந்து நூல்களக்குச் சென்றன. இக் காரணத்தால் பிற்காலத்தனவும், இப்போது வழங்குவனவுமான பேச்சு மொழிகள் தோன்றின. வடமேற்கிலுள்ள தரத' வகுப்பிலிருந்து ‘காச்மீரி வந்தது. வடக்கத்திய பிராகிருதத்தின் வழியே 'சிந்தி தோன்றியது ; இதன் ஒரு கிளையிலிருந்து வந்ததே பஞ்சாபி. இதன் இமயப் பிரிவிலிருந்து வளர்ந்த மொழிகளுள் ஒன்றே நேபாளி' மேற்கே இருந்த ஆவந்தி, லாடி, செளராஷ்ட்டிரி என்ற பிராகிருங்களிலிருந்து கிளம்பியவை குஜராத்தியும் ராஜரு தானியும். நடுக்கால மகாராஷ்ட்டிரியின் விளைவே இப்போதைய மராடி கிழக்கிருந்த அர்த்த மாகதி, மாகதிப் பிரிவுகளிலிருந்து பின் தோன்றியனவே இந்தி, பிஹாரி, வங்காளி, ஆஸாமி, ஒரியா என்பன.

பிராகிருதம் மக்களின் பேச்சுமொழியாயிருந்ததின் காரணமாக இதில் மிகப் பழமையான காலத்தில் அசோகரின் கல்வெட்டு உபதேசங்கள் வரையப்பட்டன.