பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 245

இதன் பாலி என்ற பிரிவில் புத்தரின் உபதேசங்களும் பெளத்த இலக்கியமும் எழுதப்பட்டன அர்த்தமாகதியில் ஜைன மத நூல்கள் தொகுப்பட்டன செளரசேனி என்ற நடுநாட்டுப் பிராகிருதம் சமரூ கிருத நாடகங்களில் கையாளப்பட்டது. சமரூ கிருத நாடகங்களில் உயர் மக்கள் சமரூ கிருதத்தையும், மாதரும் கீழ் மக்களும் பல்வகைப் பிராகிருதங்களையும் பேசுவர் இவ் வழக்கை ஒட்டிப் பரத முனிவர் தம் நாட்டிய சாத்திரத்தில் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வழங்கும் பிராகிருதங்கள் எனப் பல மொழிகளின் பெயர்களைத் தந்திருக்கிறார் மகாராஷ்டிரி பிராகிருதம் காதல் துறைக் காப்பியங்களுக்குப் (உ-ம் காதர் சப்தசதி) பயன்பட்டது. பைசாசத்தில் பிருகத்கதை (பெருங்கதை) எழுதப்பட்டது. பின் அபப்பிரம்சத்தில் காப்பிய நூல்களும், மத நூல் களும் எழுதப்பட்டன

இடைக்கால பிராகிருதங்களிலுள்ள முக்கியமான காப்பியங்கள்: காதாசப்தசதி, ஹாலன் என்ற அரசன் (கி. பி. 3ஆம் நூ.) தொகுத்த தொகை நூல் இதைப் போன்ற வஜ்ஜாலக்கம் என்ற தொகை, வாகாடக அரசன் பிரவரசேனன் (6ஆம் நூற்றாண்டு) செய்த இராவண வதம் அல்லது சேதுபந்தம், வாக்பதி (8ஆம் நூ) செய்த கெளடவதமும் மதுமதன விஜயமும், கெளது ஹலகவி செய்த லீலாவதி என்ற கதை, சர்வசேன அரசன் இயற்றிய ஹரிவிஜயம், உத்தியோதனின் குவலயமாலா, ஆனந்த வர்த்தனரின் விஷம பாண லீலா. அபப்பிரம்சத்தில் சிறந்த பழங்காப்பியம் சதுர்முகன் எழுதிய அப்தி மதனம். முழுப்பிராகிருதத்தில் எழுதப்பட்ட நாடகமும் உண்டு. இதற்குச் சட்டகம் என்று பெயர்; உ-ம் ராஜசேகரன் (10ஆம் நூ) இயற்றிய கருப்பூரமஞ்சரி

சமரூ கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினியே பிராகிருத மொழிகளுக்கும் முதன் முதலில் இலக்கணம் வகுத்ததாக அவருடைய பிராகிருதம் சூத்திரங்கள் பிற்