பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 த கோவேந்தன்

காலத்தில் மேற்கோளாகத் தரப்படுவதிலிருந்து தெரிகிறது. சமரூ கிருத இலக்கணத்தின் வார்த்திகம் எழுதிய வரருசி பிராகிருதத்திற்கு எழுதிய பிராகிருத பிரகாசம் என்ற இலக்கண நூல் படிக்கப்பட்டு வருகிறது. சண்டர் எழுதிய பிராகிருத இலக்கணமும் பழமை வாய்ந்த நூலாகும் பிராகிருத மொழிக்கு வால்மீகி இலக்கணத்தைச் சூத்திர உருவாய் எழுதியிருக்கிறார் என்ற ஐதிகமுண்டு. இதைத் தழுவித் திரிவிக்கிரமன் என்பவர் பிராகிருத இலக்கணவுரை எழுதியிருக்கிறார். மற்றப் பிராகிருத இலக்கண ஆசிரியர்கள்: இலங் கேச்சுரன் (பிராகிருத காமதேனு), ஹேமசந்திரன் (12ஆம் நூ ), மார்க்கண்டேயன் (17ஆம் நூ (பிராகிருத சர்வரூ வம்), சிம்ம ராஜன் (14ஆம் நூ ), (பிராகிருத ரூபாவதாரம்), லக்ஷமீதரன் (16ஆம் நூ ) (ஷட்பவு:ா சந்திரிகை), அப்பைய தீட்சிதர் முதலியவர்கள் பாலி மொழிக்குக் கச்சாயனரும், பர்மாவைச் சேர்ந்த அக்கவம்சரும் (154) இலக்கணம் எழுதியிருக்கின்றனர்

பிராகிருதச் சொற்களைத் தொகுத்த நிகண்டுகளு முண்டு உ-ம் : தனபாலனின் (972) பையாசலச்சி (பிராகிருத லக்ஷ்மி), ஹேமசந்திரனின் தேசிநாமமாலா.

பிராமி : இது ஒரு நெடுங்கணக்கெழுத்தின் பெயர். பிரமன்ால் உண்டாக்கப்பட்டது என்பதால் இதற்குப் பிராமி எனப் பெயர் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இந்துக்கள், சமணர்களாகிய இருமதத்தினர் பழைய வழக்குகளிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இந்தியாவின் மிகப் பழைய கல் வெட்டுக்கள் கி. மு. சுமார் நாலாவது நூற்றாண்டைச் சேர்ந்தவைகள். இவைகள் இந்தப் பிராமி லிபியில் எழுதப்பட்டுள்ளன. பிறகு கி. மு. மூன்றாவது நூற்றாண்டிலிருந்து, இந்தியாவிலும் இலங்கையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா முதலிய இடங்களிலும், இந்தப் பிராமி எழுத்தையே கல்வெட்டுக்கள் எழுதப் பயன்படுத்தி யுள்ளார்கள். இந்தியாவில் கி மு மூன்றாவது