பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 251

அசோகர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பல மதுரை-இராமநாதபுரம்-திருநெல்வேலி மாவட்டங்களி லுள்ள குன்றுகளிலிருக்கும் இயற்கைக் குகைகளில் காணப்படுகின்றன இவற்றின் எழுத்தும், குண்டுர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிப் புரோலு (வரிப் படம் 2) என்றகிராமத்தில் கிடைத்த கி. மு 200க்கு முந்திய தெனக் கொள்ளப்பட்ட கல்வெட்டின் எழுத்தும், இன்னும் மைசூர்ப் பக்கத்தில் கிடைத்த ஒருசில கல்வெட்டுக்களின் எழுத்தும் பிராமியே. ஆனால் இவற்றின் வடிவமைப்பு அசோகருடைய கல்வெட்டுக்களின் பிராமி எழுத்துக் களின் வரி வடிவைவிடக் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறது. தவிர இந்தத்தென்னாட்டுப்பிராமி எழுத்துக்களில் தான் மெய்யெழுத்துக்களைக் காண்பிக்க ஒற்றுப் பெற்றவை களாக இருப்பது நோக்கத்தக்கது. பிற்காலத்தில் இந்த ஒற்றே புள்ளியாக மாறிற்று. அசோகர் கல்வெட்டுக்களின் எழுத்திலோ நெடில், குறிலைக் காண்பிக்கும் குறிகள் மட்டும் காணப்படுகின்றன தனித்து நிற்கும் மெய் யெழுத்துகளை உயிர் மெய்யெழுத்துகளாகவே படிக்க வேண்டும இந்த முக்கிய வேறுபாட்டைக் கொண்டு, அசோகர் காலத்தை சேர்ந்த கல்வெட்டு எழுத்துகளைத் தென் பிராந்திய எழுத்து அல்லது திராவிடி என்றும் வட பிராந்திய எழுத்து என்றும் ஆராய்ச்சியாளர் வகுத்துக் கூறுவர்

c> -ピy_て<、モせがSPヒい Y 安-LR-F & <・中・下い-cセ یع جا : چه RX را ۱3 لله کره الههٔ نسک که

வரிப் படம் 3 சிற்றண்ணல்வாயில் (புதுக்கோட்டை) சமணர் படுக்கைக் கலவெட்டு (க. கி. மு. முதல் நூற்றாண்டு)

எஉமி நாடு குமுடுஊர பிறாநதா காவுடஇஈதென கூ சிடுபோசில இளயர செயதா அதிட அனம