பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 த. கோவேந்தன்

కుకె ? བ་མ་ན་༈ ། མ་ 그E -- ’9 = -ီဲ ဌبھی کہ پا رجح> کہ ل>

வ ரிட் படம் 4.

காசியில் பிரதிட்டை செய்யப்பட்ட பெளத்த படிமக் கல்வெட்டு

குஷாணர் காலம், கி. பி. 2ஆம் நூற்றாண்டு)

மஹா ராஜரூய காநிஷ்கரூய ஸம் 3 ஹே. 3 தி. 22 ஏதாயே புவாயே பிக்ஷரூய புஷ்யபுத்திரூய லத்த்யேவி

தவிர, கூட்டெழுத்துகள் பெரும்பாலும் இல்லாம லிருப்பதும், வடமொழியிலும், அதைச் சேர்ந்த பல மொழிகளிலும் உள்ள க, ச, ட, த, ப ஆகிய ஒலிகளின் வேறு மூன்றுவித ஒலிகளுக்கென ஏற்பட்ட மூன்று எழுத்துக்களும், ர, ஷ போன்ற ஒலிகளுக்கான எழுத்து களும் இந்தத் தென் பிராமி எழுத்தில் இல்லாமலிருப்பது நோக்கத் தக்கது. வடபிராமி எழுத்திலும், மேற்கூறிய எழுத்துகள் அவ்வளவாக இருக்கக் காணோம் காலக் கிராமத்தில்தான், அதில் மேற்சொல்லப்பட்ட ஒலிகளுக் கான எழுத்துகள் சேர்க்கப்பட்டன. இன்னுமொரு முக்கிய விஷயமாவது, இந்தத் தென் பிராமி எழுத்தில் மட்டுமே, ழ, ள, ற, ன என்ற நான்குவித ஒலிகளுக்கும் எழுத்துகள் இருக்கின்றன. இந்த ஒலிகள் திராவிட மொழிகளுக்கு மட்டும், அதில், தற்காலம்வரை தமிழ் மலையாளம் மொழிகளுக்கு மட்டும் இயல் பானவை என்பது தெரிந்த விஷயம்.