பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 25

இவற்றை ஆராயின் ஒர் உண்மை புலப்படும் மக்களின் குரலுக்கு உரிய ஒலிகள் பற்பல; அவற்றுள் சிலவற்றைப் பயன்படுத்தியே பலவகை அறிகுறிகளை அமைத்துக் கருத்துச் செல்வத்தை வளர்த்து, மொழியை வளம்படுத்தும் ஆற்றல் மக்களுக்கு உள்ளது அந்தந்த நாட்டில் வாழ்ந்த பழங்கால மக்கள், அவரவர்களுக்கு எளிதில் வந்தமைந்த ஒலிகளைத் தம்தம் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பயின்றனர் ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் ஒலி முறை அமைந்தது அதனையே அந்த மொழியின் ஒலி மரபு (Phonemic pattern) GTGörl uri

ஒலிவகைகள் மட்டும் அல்லாமல் ஒலிக்கும் முறைகளில் சில சிறப்பியல்புகளும் மொழிக்கு இன்றி அமையாதனவாக உள்ளன மக்கள் உணர்ச்சி யுடனும் உணர்ச்சியில்லாமலும் பேசுவதற் கேற்பச் சில ஒலிகளை எடுத்தும், சில ஒலிகளைப் படுத்தும், நலிந்தும் ஒலிப்பார்கள் சிறவற்றை நீட்டியும், சிலவற்றை அழுத்தி யும் ஒலிப்பார்கள். சில கருத்துகளையும் உணர்ச்சி களையும் குரல் வேறு பாட்டாலேயே உணர்த்துவார்கள். இந்த முறைகள் மொழிக்கு மொழி வேறுபடும் இவற்றை எழுதிக் காட்டுதல் இயலாது பேசுவோரின் பேச்சைக் கேட்டு அவ்வாறே கற்றல் வேண்டும் ஆதலின் ஒரு மொழி பேசுவோர், பிற மொழியைக் கற்கும்போது, அம் மொழியினர் போல் பேச இயலாமல் இடர்ப்படு கின்றனர் பிற மொழியைக் நூல்களைக் கற்றுணர்வதை விட, பிற மொழியினர் போல் பேசுந்திறன் பெறுதல் அரிதாக உள்ளது. இதனாலேயே ஆகும்

பேசுவதைப் போலவே எழுதும் முயற்சி தொடக்கத்தில் இருந்தது காலப்போக்கில் பேச்சு மொழியில் மாறுதல்களும் திரிபுகளும் ஏற்பட, எழுத்துகள் மட்டும் மாறுதல் இல்லாமல் நிற்கவே, எழுத்துகள் போதாதனவாகவும் குறையுடையன