பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 த. கோவேந்தன்

கிளம்புவதுபோல ஒரு மனிதன் தலை இருக்கிறது; அவனுடைய தலையை ஒரு கயிற்றினால் பருந்து ஒன்று பற்றிக்கொண்டு இருக்கிறது. இத் திரண்ட ஒவியம் பாப்பைரசு என்னுங் கோரைப்புல்லுக்குப் பெயர்போன நைல் ஆற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்த புராதன மக்களை எவனோ ஒருவன் வென்று அரசனாயினான் என்னும் கதையைக் கூறுகிறதாம் இவ்விதம் படத்திலுள்ள வடிவங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கின்ற பாங்கு இசுகாண்டினேவியா மக்களிடத்தி லும் அமெரிக்க ஆதிக் குடிகளிடத்திலும் உண்டு

எழுத்து வளர்ந்த வரலாற்றின் அடுத்த நிலையில் ஒவ்வோர் உருவமும் தனித்தனிப் பொருளை நேர்முக மாகக் குறிப்பதாயிற்று உதாரணமாக, எகிப்து தேசத்தில் அமைந்த ஒருவகை எழுத்தில், கண்ணின் உருவம் கண் என்ற பொருளையும், வட்ட வடிவம் ஞாயிற்றையும், பிறை வடிவம் திங்களையும் குறிப்பதாகக் கொள்ளப்பட்டன. இவ்வடிவங்களைக் கண்ட மாத்தி ரத்தில் பொருள் இன்னது என்று யாவரும் அறிந்து கொள்வர். ஆயினும், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பொருளின் நிலையை அல்லது செயலைக் காட்டக் கூடுமேயல்லாது, எண்ணினையோ, வேற்றுமையையோ, காலத்தையோ காட்டாது

எனவே, பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தல் இவ்வகை எழுத்தால் இயலாது அன்றியும் அன்பு, அறிவு, நட்பு, பகை ஆகியவற்றை நேரே உணர்த்தக்கூடிய படம் இல்லாததால், நாளடைவில் பிற பொருள்களை உணர்த்தும் படங்களே இவற்றிற்காகப் பயன்படுத்தப் பட்டன. உதாரணமாகப் பல மாடுகளின் வடிவம் செல்வம் என்ற பொருள் உணர்த்துவதாகக் கொள்ளப் பட்டது; கைகள் கோத்திருத்தல் நட்பு என்பதைக் காட்டுவதாகக் கொள்ளப்பட்டது; இவ்வகை கருத்து களை இடமும் பொழுதும் நோக்கியே மக்கள் உணரவேண்டும்