பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 29

அடுத்தபடியாக, ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கருத்தினைக் குறித்து நிற்காமல், அவ்வவ் வடிவத்திற்கு உரிய ஒலியைக் குறிப்பதாகக் கருதப்பட்டது இந் நிலையை ஒலியெழுத்து நிலை என்னலாம் சித்திரக் குறுக்கெழுத்துப் போட்டியில் படிப்பது போன்றே மக்கள் இவற்றைப் படிக்கலாயினர்

ஒவ்வோர் உருவங் காட்டும் முழு ஒலியையும்

கொள்ளாமல், அவ்வவ் ஒலியின் முதலசையை மாத்திரம் கருத்தில் கொள்ளத் தலைப்பட்ட மக்களும், முதல சையைக்கூட முழுதும் எடுத்துக்கொள்ளாமல், முதல் எழுத்து அளவே எடுத்துக்கொண்ட மக்களும் உண்டு ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வோர் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட எத்தனையோ பல சொற்கள் இருப்பவும், அவற்றுள் ஒன்றன் வடிவம் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற வினா எழுதல் இயல்பே இதற்கு அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட சொல் அம் மொழியில், அதிகமாக வழக்காற்றில் இருந்த சொல் என்பது ஒரு காரணம் அன்றி, அதன் வடிவம் ஏனையவற்றின் வடிவங்களைவிட எளிதான வடிவம் என்பதும் காரணம் ஆகும் உதாரணமாக, அம்மை, அப்பன், அணில், அடவி, அருவி, அணி, அடகு ஆகியவற்றுள் ஏதாவதொன்றன் வடிவந்தான் பெரும் பான்மை வழக்குப்பற்றி அகரத்தின் வடிவமாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட நிலை எய்தியிருக்கும்

எனவே, ஆதிகாலத்தில் மக்கள் ஒவியத்தின் வழியாகக் கதை சொல்லக் கற்றுப் பிறகு ஒவ்வொரு வடிவத்தையும் ஒவ்வொரு தனித்தனிப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தினர் நாளடைவில், அவ்வடிவு பொருளைக் குறிக்காமல் ஒலியைக் குறிக்கத் தலைப் பட்டது பின்னர், அவ்வடிவு அல்லது அவ் வடிவின் திரிபு வேறுபாடுகள் எனக் கருதப்படுகின்றன