பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 த. கோவேந்தன்

தமிழ் எழுத்துகள்

தமிழ் நூல்கள் அச்சிடத் தொடங்கப் பெற்ற காலத்தே தான் தமிழ் எழுத்துகள் எல்லாம் இப்போது காணப்படும் நிலையான வரி வடிவங்களைப் பெற்றன ஆகவே, சற்றேறக்குறைய இந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள வரிவடிவ அமைப்பை அடைந்தன என்று கூறலாம் அதற்குமுன் ஒவ்வொரு நூறு ஆண்டிலும் இவ்வெழுத்துகளின் வரிவடிவங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாகி வளர்ச்சியடைந்து வந்து இருக்கின்றன

தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவங்களைக் கோயில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடு களிலும் வரையப்பெற்ற பழைய தமிழ்ச் சாசனங்களில் தான் பார்க்கலாம் தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் கிபி ஏழாம் நூற்றாண்டு முதலாகவே இக் காலத்தில் கிடைக்கின்றன. அவற்றை நோக்குங்கால், தமிழ் மொழிக்கு இரண்டு வகையான வரிவடிவங்கள் வழங்கி வந்தன என்று தெரிகிறது அவை தமிழ் எழுத்து, வட்டெழுத்து எனப்பெறும். அவற்றுள், தமிழ் எழுத்து என்பது இந் நாள்களில் வழங்கிவரும் தமிழ் எழுத்து களின் பழைய வரிவடிவங்களேயாம் இத்தகைய எழுத்துகளால் வரையப்பெற்ற தமிழ்ச் சாசனங்கள் தொண்டை மண்டலம், சோழ மண்டலம் ஆகிய நாடுகளில் பல்லவர்களின் ஆட்சிக் காலமுதல் காணப் படுகின்றன வட்டெழுத்து என்பது வளைந்த கோடு களால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்தாகும்

வட்டெழுத்தால் பொறிக்கப்பெற்ற தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் பாண்டி மண்டலம், சேர மண்டலம் ஆகிய நாடுகளில் 8ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டுவரையில் அகப்படுகின்றன. பாண்டியரது முதற் பேரரசில் பாண்டி மண்டலத்திலும் சேர மண்டலத்திலும் வழங்கி வந்த எழுத்துகள் வட்ட எழுத்துகளே என்பது அவ் வேந்தர்களுடைய கல்