பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 39

எழுதியவாறே பேசுதல் இல்லை எனினும், எழுதியவாறே எழுத்துகளைப் கூட்டிப் படித்தல் இருந்தால் ஒருவாறு அமையும் ஆங்கிலம் முதலிய சில மொழிகளில் எழுத்துகளைத் தனித்தனியாக ஒலிக்கும் முறைக்கும், அவற்றைக் கூட்டி ஒலிக்கும் முறைக்கும் வேறுபாடு உண்டு சில சொற்களில் இரண்டோ ரெழுத்துகள் எழுதப்பட்டிருந்தும் ஒலிக்கப்படுவது இல்லை Depot என்ற சொல்லில் t ஒலியும், Debt என்ற சொல்லில் b ஒலியும், Know என்ற சொல்லில் k ஒலியும் ஒலிக்கப் படுவதில்லை இந்திய மொழிகளில் இவ்வாறு எழுதப்பட்டு ஒலிக்கப்படாத ஒலிகள் இல்லை ஒலிக்கும் முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுமே தவிர, ஒலிக்கப் படாமலே விடுபடுதல் இல்லை தமிழில் எழுதப்படும் எல்லா எழுத்துகளும் கூட்டி ஒலிக்கப்படும்

ஆங்கிலம், அரபு முதலிய மொழிகளில் ஒவ்வொரு எழுத்தும் பெயருடன் வழங்கப்படும். 'வ்' என்ற ஒலியுள்ள ஆங்கில எழுத்துக்கு டபிள்யூ (W) என்பது பெயர் இவ்வாறு, எழுத்துக்கு உரிய ஒலி ஒன்றாகவும், அதன் பெயர் வேறொன்றாகவும் இருப்பதால், எழுத்து கூட்டி ஒலிப்பதில் ஒருவகை இடையூறு உள்ளது Leg என்ற சொல்லில் உள்ள மூன்று எழுத்துகளையும் பெயர் சொல்லிக் கூட்டினால் l-e-g, எல்-ஈ-p, எலீp, எல்லீp என்றுதான் ஒலிக்கப்படும் l-e-g, என்பதில் ல்-எ-க் என்ற ஒலியை மட்டும் உள்ளத்தை கருதியே, அந்தச் சொல் 'லெக் என ஒலிக்கப்படுகிறது

உருது தவிர மற்ற இந்திய மொழிகளில் எழுத்து களின் பெயர் அவற்றின் ஒலியாகவே அமைந்துள்ள படியான் கூட்டியொலித்தல் எளிதாக உள்ளது வரம்பு என்ற தமிழ்ச் சொல்லில் உள்ள நான்கு எழுத்துகளின் பெயர் சொல்லி வ-ர-ம்-பு என்று கூட்டினால் வரம்பு’ என்ற சொல்லின் ஒலி அமைந்து விடும்

ஆயின் வர-ம்-பு என்று அந்தச் சொல்லைக் கூட்டும் முறை எழுத்துக்கூட்டும் முறை என்று சொல்வது ஒரு