பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 த. கோவேந்தன்

என்பர் பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலும் வட்டெழுத்து வழங்கியது வட்டெழுத்தில் அகரத்தின் வடிவம் கீழ்க்கண்டவாறு மாறி வந்துள்ளது

8 ஆம் நூற்றாண்டு £4 10ஆம் நூற்றாண்டு 회 13ஆம் நூற்றாண்டு &A 14ஆம் நூற்றாண்டு *} 18ஆம் நூற்றாண்டு رده ده

ஒலி : அகரத்தினை எழுத்தாகக் கூறும்போது சாரியையைச் சேர்த்து அகரம், அகாரம், அஃகான் என்று வழங்கியதாக இலக்கண நூல்களிலிருந்து அறிகிறோம் அ-னா என்று வழங்குவதனை இன்றும் கேட்கிறோம் குழந்தைகள் எழுத்துகளைப் பாட்டோசை யாகப் பாடும்போது அஆனா என வழங்குவதனையும் காண்கிறோம்

அ என்ற ஒலியை a என அனைத்து நாட்டு ஒலி நூலோரும் எழுதிக் காட்டுவர் நாவினைப்படுக்கவைத்து வாயினைத் திறந்ததும் ஒலி அ என வெளிவருகிறது. ஆதலின் இதை அடிப்படை ஒலி என்பர் பரிமேலழகர் வாயினையும் நாவினையும் பலவகையில் மாற்றுவதால் இந்த ஒலியே பலவகை எழுத்துகளாக மாறுகின்றது; ‘கடவுள் எங்கும் நிறைந்திருப்பதுபோல எல்லா எழுத்துகளிலும் அகரம் உண்டு” என்பர் நச்சினார்க் கினியர் தனி மெய்யெழுத்துகளை இக் இங்’ என்று இப்போது ஒதுவதுபோன்று அல்லாமல் அகரம் சேர்த்தே க, ங் என முன்னாளில் வழங்கிவந்தனர்.

அ என்ற ஒலி, எடுத்துச் சொல்லப்பெறாதபோது நெகிழ்ந்துபோய்ப் பலவகையாக மாறும் தமிழ்ச் சொற்றொடரில் எழுவாயிலேயே பால் விளங்கி