பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 43

விடுவதால் பயனிலையாக வரும் வினைச் சொல்லில் பாலை விளக்கும் விகுதி எடுத்துச் சொல்லப் பெறாமல் அவ்வாறு நெகிழ்ந்துபோகும் வருகின்றனன் என்னும் போது கடைசியில் வரும் அன் என்ற அகரம் நெகிழ்ந்து பொது உயிரின் ஒலிபெறும் (Neuter vowell-But) என்பதில் வரும் உயிர் போன்றது . இதனை A என்று எழுதுவர்) அளவுக்குமேல் எடுத்துச் சொல்லும்போதும் இந்த ஒலி மாறும் பின்னர்ச் சார்ந்துவரும் எழுத்துக்களின் இயைபால் மேலும் மாறும். வம்பன், இராமன் என்ற சொற்களில் கடைசியில் வரும் ன் என்ற எழுத்து மேல் அண்ணத்தின் முயற்சியால் பிறப்பதால் அ என்பதும் அண்ணச் சாயல் (Palatalisation) கொண்டு, இகரக்கூறு பெற்று, எகரம் போலாகி வம்பெ இராமெ என ஒலிக்கும் கும்பம் என்பது போன்ற இடங்களில் இதழ் அல்லது உதட்டின் முயற்சியால் பிறக்கும் மகரத்தின் சார்பால் உதட்டுச் சாயல் (Lablalisation) கொண்டு உகரக்கூறு பெற்று ஒகரம் போலாகிக் கும்பொ என ஒலிக்கும்

பலா என்பது மொழி முதல் எழுத்தோசை பெறாவிடின் ப்லா, பிலா என்றாகும்போது அகரம் இகரமாக மாறக் காண்கிறோம் அவர்கள் என்பது வட தமிழ் நாட்டில் வழங்கும்போது அவங்கள் என்றும் அவுங்கள் என்றும் வகரச் சார்பால் உதட்டுச் சாயல் பெற்று அகரம் உகரமாகும்; தென் தமிழ் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் அவர்கள் என்பதில் உள்ள ரகரச் சார்பால் அண்ணச் சாயல் பெற்று அவிகள் என்றாகும் போது அகரம் இகரமாகக் காண்கிறோம் ரகரம் கெடுவதால் முன்னுள்ள அகரம் நீண்டு அவாள் என்று வழங்கும்போது அகரம் ஆகாரமாக மாறக் காண்கி றோம். ஒள என்பது அவ் என்றும் ஐ என்பது அய் என்றும் எழுதப்பெறும்போது ஐ, ஒள என்ற இரண்டும் அகரமாகக் காண்கிறோம். இரண்டு மாத்திரை எழுத்துகளாகிய இவை ஒரு மாத்திரையாக இவ்வாறு ஒலிக்கும்போது ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம்