பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3



பதிப்புரை

றைந்த தமிழறிஞர் புலவர். த. கோவேந்தன் அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் ஜூலை, மாதத்தில் மொழியியல் சார்ந்த நூல்கள் இரண்டினை தமிழுலகுக்கு தர என்னிடம் பணிந்தார். அவை ஒன்று ‘செந்தமிழ் பெட்டகம்’ எனும் தமிழ் படைப்புலகத்தின் மேன்மையும் கூறும் ஆய்வுகளும் “தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் உங்கள் கைகளில் தவழும் இந்நூலும் பதிப்பிப்பதில் தமிழுக்கு நான் செய்யும் ஒரு தொண்டெனவே இதை வெளியிடுகிறேன்.

உலகம் போற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சியை ஒலிவடிவத்தின் மூலக் கூறுகளை ஆய்ந்து தரும் இந்நூல் தமிழுலகுக்கு ஒரு அருட்கொடை என்றே கருதுகிறேன்.

இந்நூலை ஆசிரியருக்கு காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன்.

அன்புடன்
பதிப்பகத்தார்