பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 51

(ரத்னம்-இரத்தினம்), பின்வரும் யகரத்தின் சார்பால் அண்ணச் சாயல்பெற்று உதட்டுச் சாயல் நீங்கிய குற்றியலுகரத்தின் குற்றியலிகர ஒலியாகவும் (காடு+யாது =காடியாது), ஞ, ண, ந, ம, ன, ய, ர, ள, வ, ழ, ள, என்பவற்றின் பின் யாகாரத்தினை ஒலிக்க முந்தும் போது, எழும் வழுக்கொலியாகவும் (Glide) மண்+யாது = மண்ணியாது வடமொழியில் ஈற்று யகரத்தின் தமிழ் ஒலியாகவும் (கன்ய>கன்னி), சிறு சிறி முதலிய இலக்கிய வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாகவும், இருவர்> இரிவர் என்பது போன்ற மலைநாட்டு வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாகவும், கத்திக்குPகத்திக்கி எனத் தெலுங்கு உறவால் வடதமிழ்நாட்டிலே முன்வரும் இகரச் சார்பால்பின் வரும் உகரத்தின் மாற்றெழுத் தாகவும் இந்த இகரம் வரக்காண்கிறோம். கொடுந்தமிழ் வழக்கில் இகரம் எகரமாக ஒலிக்கும் (இடை, எடை இழி வழக்கில் முதலில் வரும் எழுத்துடன் சேர்ந்து இது அதனை மாற்றுவதும் உண்டு (இரட்டி-ரெட்டி : இரண்டு-ரெண்டு). நாச் சிறிது அண்ணத்தை ஒட்டவரின் யகரம் ஒலிக்குமாதலின், இழிவழக்கில் இகரம் யகரத்தோடு ஒலித்தலும் உண்டு முன்னாளிலும் இலக்கிய வழக்கில் போஇ>போய் என இகரம் யகரமாக ஒலித்ததும் உண்டு

பொருள். இவன் என்பதைப்போல அகச் சுட்டாகவும், இக் குதிரை என்பதைப் போலப் புறச் சுட்டாகவும், இரு திணை முக்கூற்றொருமை விகுதியாகவும் (கையிலி), ஆண்பால் விகுதியாகவும் (வில்லி), பெண்பால் விகுதியாகவும் (கூனி), ஒன்றன்பால் விகுதியாகவும் (காலி), வினைமுதற்பொருள் விகுதியாகவும் (அலரி), செயப் படுபொருள் விகுதியாகவும் (தீனி), கருவிப்பொருள் விகுதியாகவும் (மண்வெட்டி,) வினைச்சொற்களில் எதிர்கால முன்னிலை ஒருமை விகுதியாகவும் (வருதி), ஏவல் ஒருமை விகுதியாகவும் (செல்லுதி), வியங்கோள் விகுதியாகவும் (காட்டி), பகுதிப்பொருள் விகுதியாகவும் (உருளி), தொழிற்பெயர் விகுதியாகவும் (வெகுளி), வரும்