பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 53

தனித்து நின்று, பின்னர்த் தலையின் வலப்புறத்தில் ஒதுங்கிவரத் தொடங்கியது.

வட்டெழுத்தில் வலப்புறத்தில் வலஞ்சுழியான வளைவாக எழுகிறது

இது தமிழுள்ளிட்ட இந்திய மொழிகளில் நான்காம் உயிர்; இகரத்தின் நெடிலாம். இது சுரத்தாலும் மாத்திரை யாலும் நாவின் முறுக்கேற்றத்தாலும் அதனின் வேறாகும்; ஆதலின் இதனைச் செறிவுடைக் (Close) (56%lus (Unrounded) apaśrassrú (Front) @spić, (Terse) plu%lso என்பர் அகரம் ஆகாரமாதற்குக் கூறியவை இதற்கும் ஆகும் நெகிழாமையைத் தடுக்க யகர ஒலி பின் வரும்; கல்வெட்டுக்களில் இதன் பின் யகரம் இட்டு எழுதக் காண்கிறோம் (தீய்) ஒரெழுத்தொரு மொழி, விளி, அளபெடை பெற்ற இடம் முதலியவற்றிலன்றி ஈ ஈற்றில் நெகிழ்ந்து போவதால் வருவது அருமையாயிற்று செய்வி என்பதன் ஈற்றில் உள்ள இ இவ்வாறு குறுகிய ஈ யே என்பர் வடமொழி ஈ, ஈறு இகரமாகும்.

பொருள் : "பல்லெல்லாம் தெரியக்காட்டி ஈ என இளிக்கிறான்” என்ற வழக்கை நோக்க, ஈ என்பது இழிந்தோன் இரப்பின் சைகையாகிக் குறிப்போசையாகி இரப்புரையாகியது என்பர்; சைகை ஒலி மொழியாக வளர்ந்தது; குறிப்போசை மொழியாக வளர்ந்தது என்ற கொள்கைகளுக்கு, இது எடுத்துக்காட்டாம் பின்னர்ப் பொதுவாகக் கொடு என்ற பொருளில் வழங்கியது (1) பகிர்தல், கணக்கில் வகுத்தல், ஆசிரியரின் கற்பித்தல், படைத்தல், ஈனுதல், நேர்தல், அழிவு என்ற பொருளில் வரும் வினைப்பகுதியாகவும், (2) ஈ, தேனி, வண்டு என்ற அறுகாலிகளையும், இறகு என்பதையும் குறிக்கும் பெயர்ச் சொல்லாகவும், (3) அதிசயக் குறிப்பாகியும்,