பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 55

தமிழ் உள்ளிட்ட இந்திய நெடுங்கணக்கு எழுத்து வரிசையில் இஃது ஐந்தாவது ஆகும். இஃது உயிர் எழுத்து உயிர் எழுத்து என்பது நா, அண்ணம், இதழ்\முதலியவை ஒன்றோடு ஒன்று ஒற்றுகிற தடை ஒன்றும் தோன்றாதிருக்கக் குரல் வளையின் இதழ் மட்டும் துடிப்பதால் எழும் ஒலி எழுத்தாகும். அண்ணத்தினைத் தொடாதபடி அதனை நோக்குமாறு நாவினை உயர்த்தும்போது முன் அண்ணம் அல்லது வலிய அண்ணத்தினை இவ்வாறு நாவானது நோக்குகிற நிலையில் ஒலிக்கின்ற உயிர் எழுத்துகளை முன்னு யிர்கள்' (Front vowels) என்பர். பின் அண்ணம் அல்லது மெல்லிய அண்ணத்தினை நோக்கி நா எழும்போது ஒலிக்கின்ற உயிகளைப் பின்னுயிர்கள்’ (Back v) என்பர். நாவிற்கும் அண்ணத்திற்கும் நடுவே இடைவெளி குறைந்தோ, அகன்றோ இருக்கும் குறைந்த இடைவெளி தோன்ற ஒலிக்கும் உயிர் அண்மு உயிர் (Close w.) ஆம். அகன்ற இடைவெளி தோன்ற ஒலிக்கும் உயிர் திறப்பு உயிர்” (Open v) ஆம் நாவானது சிலபோது இறுகிச் செறிந்தும், சிலபோது தளர்ந்து நெகிழ்ந்தும் நிற்கும். செறிந்த நிலையில் ஒலிக்கும் உயிரே செறிவு உயிர் (Terse v) ஆம். நெகிழ்ந்த நிலையில் ஒலிப்பன நெகிழ்வு உயிர்’ ஆம். பொதுவாகத் தமிழில் நெடில் செறிவுயிராகவும், குறில் நெகிழ்வுயிராகவும் ஒலிக்கக் காண்கிறோம். இதழ் முயற்சியால் இதழ் குவிதலும் இதழ் விரிதலும் தோன்றும் இதனால் 'குவியுயிர் (Rounded v) என்றும் குவியாவுயிர் (Unrounded v.) என்றும் உயிர்கள் பாகுபாடு பெறும்