பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 57

சொல்லின் முடிவில் குற்றியலுகரமாக ஒலிக்கக் காணலாம் என்பது இதற்கு அனைத்து நாட்டு ஒலியி யலார் வழங்கும் குறி

உகரம் வரவேண்டும்>வரணும்>வரணும்>வரணம் என அகரமாகவும், சிறு இலை>சிறியிலை, புல்>பில் என இகரமாகவும், சுவர்>செவர் என எகரமாகவும், உடை>ஒடை என ஒகரமாகவும் மருவும்; தவறு>தவுறு; மகிழம்பூ>மகுடம்பூ தொடை>துடை என அகர இகர ஒகரங்களில் மாற்றொலியாகவும் மருவி வரும். யுகம்>உகம் என யு என்பது உகரமாக வரும் தமிழில் மொழி முதலாகாத யு (உயுத்தம்) யூ (உயூகி), யோ (உயோகு), ரு (உருசி), ரூ (உருபகம்), ரோ (உரோகம்), லு(உலுத்தன்), லூ(உலூகம்), லோ(உலோகம்) என்பவை வடமொழியில் முதல் எழுத்தாக வரும் சொற்கள் தமிழில் ஒலிக்க வரும்போது முன்னோக்கும் உடம்படு உயிர் (On glide) போல முந்துநிலை (Prothesis) எழுத்தாக உகரம் மேலே கண்டபடி வரும் தமிழில் மயங்காத மெய் யெழுத்துகள் வடமொழியில் மயங்கி வந்தால் அவ் வடசொற்கள் தமிழில் ஒலிக்கும்போது சம்சயம்> சமுசயம்; பர்வதம்>பருவதம், ரூ லோகம்> சுலோகம்; பக்வம்>பக்குவம்; சர்க்கரை>சருக்கரை என்பவற்றிற் போல இடையமை எழுத்தாகவும் உகரம் வரும் சொற்கள் புணரும்போது வல்+கடிது> வல்லுக் கடிது எனவும் தனித்து வரும்போதும் சொல்-சொல்லு எனவும், சாரியை அல்லது கடையமை எழுத்து அல்லது விரித்தல் விகாரமாக உகரம் வரும். மெல்லெழுத்தின் பின்னேயே அன்றி வழு-வழுவு என உயிர் ஈற்றின் பின்னும் உகரம் வரக் காண்கிறோம். இத்தகைய இடங்களில் பழைய வடிவம் வழுஉ என அளபெடையாக இருந்து இருத்தல் வேண்டும் ஊஉ என்ற அளபெடை தொல் காப்பியர் காலத்தில் ஈரொலியுயிராக (Diphthong) ஒலித்ததால் உகரம் ஈற்று ஒலியாக அமைந்தது.

அப்பால், மேல் (உம்மை), புறம் (உப்பக்கம்), அண்மையும் சேய்மையும் அல்லாத இடைப்பட்ட தூரம்